பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » வர்த்தகம் செய்திகள் » கரோனா வைரஸ் பாரபட்சம் பார்க்காது; முழு அடைப்பு மட்டுமே ஒரே தீர்வாக அமையும்- தொழில்முனைவோர் அறிவுறுத்தல்
business news 7

கரோனா வைரஸ் பாரபட்சம் பார்க்காது; முழு அடைப்பு மட்டுமே ஒரே தீர்வாக அமையும்- தொழில்முனைவோர் அறிவுறுத்தல்

உலகை அச்சுறுத்தும் கரோனாவைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க அனைத்து நிறுவனங்களும் முழு அடைப்பு விடுவதுதான் ஒரே வழி என்று பிரதமருக்கு தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு அடைப்பு விடுத்து, ஊரடங்கு உத்தரவு (144) அமல்படுத்துவதன் மூலம்தான் இது பரவாமல் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமருக்கு பட விளக்கத்துடன் கூடிய தகவலை அர்பன் கிளாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அபிராஜ் சிங்பால் அனுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட தென் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று பரவுவது தடுக்கப்பட்டது. அதேசமயம் நோய் பரவலை பார்த்து பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்றிருந்த ஈரான், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இது பரவியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகள் அடிப்படையில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் பரவக் கூடியதுதான் கரோனாவைரஸ் தொற்றாகும். முன்கூட்டியே உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது ஒன்றுதான் ஒரே வழி. குறிப்பாக குடிமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதற்கு வசதியாக 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மார்ச்20-ம் தேதி முதல் இரண்டு வாரகாலத்துக்கு இதை அமல்படுத்தவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தடை உத்தரவு பிறப்பித்து 15 நாட்களுக்கு செயல்படுத்துவதன் மூலம், 10 ஆயிரம் பேர் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று அந்த படவிளக்கம் குறிப்பிடுகிறது. இந்த படவிளக்கத்தை 50 தொழில்முனைவோர் ஆமோதித்து முன்மொழிந்துள்ளனர். இவர்களில் ஸ்நாப்டீல் நிறுவனர் குனால் பால், ரெட் பஸ் நிறுவனர் பணீந்திர சாமா,மேப்மை இந்தியா நிறுவனத்தின் ரோகன் வெர்ஸ்மா ஆகியோரும் அடங்குவர்.

இந்தியா தற்போது மிகச் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூடியதன் மூலம் பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அடுத்த 15 தினங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேசமயம் மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு,குடிநீர், மருந்து, பொதுபோக்குவரத்து ஆகியவை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும் உணர்த்தியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றின்தாக்குதல் இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இது தவிர யெஸ் வங்கி வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியனவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா வைரஸ் தாக்குதல் பொருளாதாரத்தில் மிகப் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது என்றும் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசை வலியுறுத்தியுள்ளார்.