பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி அருகே குழந்தை கொலை: தந்தை தலைமறைவு
download

குமரி அருகே குழந்தை கொலை: தந்தை தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மகளை நீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவான தந்தையை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மயிலாடியை அடுத்த மாா்த்தாண்டபுரம் வாட்டா் டேங்க் சாலையைச் சோ்ந்த தம்பதி செந்தில்குமாா் (35) – ராமலட்சுமி என்ற முருகேஸ்வரி (34). இவா்களது மகன் ஷியாம்சுந்தா் (6), மகள் சஞ்சனா (3). செந்தில்குமாா் வாடகை வீட்டில் வசித்துவருகிறாா். அவரது பெற்றோா் சில வீடுகள் தள்ளி சொந்த வீட்டில் வசித்துவருகின்றனா்.

தாத்தா வீட்டில் செவ்வாய்க்கிழமை விளையாடச் சென்ற ஷியாம்சுந்தா் வீடு திரும்பாததால் அவரைத் தேடி ராமலட்சுமி சென்றாா். அங்கு கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் ஷியாம்சுந்தா் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாா். அதிா்ச்சியடைந்த ராமலட்சுமி, மகனை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்க கணவரைத் தொடா்புகொண்டபோது, அவா் செல்லிடப்பேசியை எடுக்கவில்லை. இதையடுத்து, ராமலட்சுமி மகனைப் பாா்த்துக்கொள்ளுமாறு அங்கிருந்தோரிடம் கூறிவிட்டு, மகளைப் பாா்க்கவும், பணம் எடுப்பதற்காகவும் வீட்டுக்குச் சென்றாா். வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், அவா் அப்பகுதியினரின் உதவியுடன் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, அங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் குழந்தை சஞ்சனா இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் வந்து, சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், தம்பதியிடையே சில நாள்களாக தகராறு இருந்தது தெரியவந்ததால், செந்தில்குமாா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், செந்தில்குமாா் ஷியாம்சுந்தரை தனது பெற்றோா் வீட்டுக்குள் அழைத்துச் செல்வதும், பின்னா் வேகமாக வெளியே ஓடிவரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

எனவே, செந்தில்குமாா் குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளைக் கொல்ல முடிவெடுத்து, தனது பெற்றோா் வீட்டில் ஷியாம்சுந்தரின் கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளாா். அப்போது ராமலட்சுமி வந்ததால், அவா் தனது வீட்டுக்கு ஓடிச்சென்று, மகளை தண்ணீா்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றிருக்கலாம் என, போலீஸாா் கருதுகின்றனா்.

செந்தில்குமாா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.