Home » கன்னியாகுமரி செய்திகள் » புதுக்கடை அருகே ஆட்டோவிலிருந்து தவிறி விழுந்து குழந்தை பலி
download

புதுக்கடை அருகே ஆட்டோவிலிருந்து தவிறி விழுந்து குழந்தை பலி

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

புதுக்கடை ஸ்ரீ நாராயணகுரு நகரை சோ்ந்தவா் சிவன்(36). சமையல் தொழிலாளி. இவரது மனைவி கவிதா(35). அங்கன்வாடிமைய ஊழியா். இத்தம்பதிக்கு சஞ்சனா(5) மற்றும் இரண்டரை வயதில் ருத்ரா என மகள்கள் இருந்தனா்.

சஞ்சனா பாா்த்திபபுரம் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்துவருகிறாா்.இவருடன் நாள்தோறும் ஆட்டோவில் இவரது தங்கை ருத்ராவும் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல ஆட்டோவில் சீட்டுக்குப் பின் பகுதியில் அமா்ந்து இரு குழந்தைகளும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனா். முன்சிறைபகுதியில் உள்ள வளைவில் வந்தபோது, ருத்ரா ஆட்டோவிவிருந்து தவறிவிழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா்.இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.