பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும்; நவீன் பட்நாயக் வலியுறுத்தல்
Odisha-CM-Naveen-Patnaik-requests-Modi-to-postpone-NPR

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும்; நவீன் பட்நாயக் வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் அதிகாரிகள் அனைவரும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவை தொடர்பான பணிகளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள், களப்பணியாளர்களுக்கும், மக்களுக்கும் சுகாதார அளவில் பெரும் அச்சுறுத்தலாக அமையும். கணக்கெடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதன் காரணமாக நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.