Home » விளையாட்டுச்செய்திகள் (page 8)

விளையாட்டுச்செய்திகள்

Indian-team-looking-to-advance-to-the-semifinal--Todays

அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி – வங்காளதேசத்துடன் இன்று மோதல்

பர்மிங்காம், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. இந்திய அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் இருந்த இந்திய அணி இதே ஆடுகளத்தில் (பர்மிங்காம்) நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்து முதல் ...

Read More »
Wimbledon-Tennis-Djokovic-wins-in-the-first-round--Osaka

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி – ஒசாகா அதிர்ச்சி தோல்வி

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-5, 6-3 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் கோல்ஸ்கிரீபரை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் ருபென் பெமெல்மான்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் ...

Read More »
Game-against-England-Rishabh-Pant-as-4th-row-player-of-the

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் – ரோகித் சர்மா கருத்து

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் கண்ட தோல்வி குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வர புதிய சீருடை (ஆரஞ்சு நிறம்) தான் காரணம்’ என்று விமர்சித்து உள்ளார். * இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் களம் இறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ட போது, ...

Read More »
World-cup-circket-Sri-LankaWest-Indies-clash-today

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

செஸ்டர்-லீ-ஸ்டிரிட், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கையும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக களம் காண்கின்றன. இவ்விரு அணிகளும் உலக கோப்பை கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2-ல் இலங்கையும், 4-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு ...

Read More »
Copa-America-Football-Tournament-Peru-shocked-Uruguay

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: உருகுவேக்கு அதிர்ச்சி அளித்தது பெரு

சல்வடோர், 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சல்வடோரில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, பெருவை எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த உருகுவே தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. வழக்கமான நேரத்தில் ஜியார்ஜியன் டி அராஸ்கட்டா, எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ் ஆகிய வீரர்கள் கோல் அடித்த போதிலும் அது வீடியோ மறுஆய்வுக்கு பிறகு ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் உருகுவே அணியினர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். ...

Read More »
All-India-Volleyball-Customs-Team-Champion

அகில இந்திய கைப்பந்து: சுங்க இலாகா அணி ‘சாம்பியன்’

சென்னை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் சுங்க இலாகா (சென்னை) அணி 19-25, 25-23, 25-22, 21-25, 16-14 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ...

Read More »