Home » விளையாட்டுச்செய்திகள் (page 724)

விளையாட்டுச்செய்திகள்

ஆசிய இளையோர் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி

சென்னை, மே.14- 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய இளையோர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மியான்மரில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 23-25, 21-25, 9-25 என்ற நேர்செட்டில் ஈரானிடம் தோல்வி கண்டது. இந்திய அணி இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Read More »

கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ்

மும்பை, மே. 14– ஐ.பி.எல். போட்டியின் 51–வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? நிலையாகும். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். அந்த அணி 12 ஆட்டத்தில் 6 வெற்றி, 6 ...

Read More »

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ரூ.2,140 கோடி வருமானவரி வசூல்: மத்திய நிதி மந்திரி தகவல்

புதுடெல்லி, மே.13- 2004-05-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வரவேண்டிய வருமான வரி தொகையான ரூ.2,510.48 கோடியில் இருந்து இதுவரை ரூ.2,140 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது என்று டெல்லி மேல்-சபையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய நிதி மந்திரி ஜெயந்த் சின்கா நேற்று பதில் அளித்துள்ளார். பாக்கி தொகையான ரூ.370.48 கோடிக்கான மேல் முறையீடு நிலுவையில் உள்ளது. அப்பீல் நடைமுறைகள் முடிந்ததும் மீதமுள்ள தொகை வசூல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடரில் புதிய பிரச்சினை

புதுடெல்லி, மே.13- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வருகிற டிசம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு அரசுகளின் அனுமதியை பொறுத்தே இந்த போட்டி தொடர் நடைபெறுவது இறுதியாகும். இந்த போட்டி தொடருக்கு பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே புதிய பிரச்சினை எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ...

Read More »

சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி: இந்தியா-தென் கொரியா அணிகள் இன்று மோதல்

டான்குயன், மே.13- 35 அணிகள் பங்கேற்றுள்ள சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ‘டாப்-12’ அணிகளுக்கான (குரூப்-1) டி பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. இந்திய அணியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமித் ரெட்டி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், கலப்பு இரட்டையர் பிரிவில் ...

Read More »

சர்வதேச டென்னிஸ் போட்டி: இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 2-வது சுற்றுக்கு தகுதி

சமார்கன்ட், மே.13- சர்வதேச டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமார்கன்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, தகுதி சுற்று மூலம் களம் கண்ட ரஷிய வீரர் இவான் காக்கோவை சந்தித்தார். இதில் யுகி பாம்ப்ரி 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சகெத் மைனெனி 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் எஸ்தோனியா வீரர் விளாடிமிர் இவனோவை தோற்கடித்து ...

Read More »