Home » விளையாட்டுச்செய்திகள் (page 590)

விளையாட்டுச்செய்திகள்

வங்காளதேசத்திற்கு எதிராக போராடி திரில் வெற்றி பெற்றது இந்தியா

6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் இந்திய அணி குரூப்2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்த பிறகே சற்று நிம்மதி அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக்கில் இன்று ...

Read More »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரை இறுதிப்போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டெல்லி மைதானத்தில் 2 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஒரு கேலரி வரைபட திட்ட அனுமதியின்படி கட்டப்படாததால் தெற்கு டெல்லி மாநகராட்சி அதற்கு அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்தது. இந்த விவகாரத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்குள் தீர்வு காணாவிட்டால் முதலாவது அரை இறுதிப்போட்டி டெல்லியை விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று ...

Read More »

பெண்கள் உலக கோப்பையில் இன்று மூன்று ஆட்டங்கள்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா – இலங்கை (பிற்பகல் 3.30 மணி), ‘பி’ பிரிவில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் (இரவு 7.30 மணி), வங்காளதேசம்- பாகிஸ்தான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) தென்ஆப்பிரிக்கா 67 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. அயர்லாந்துக்கு இது 3-வது தோல்வியாகும்.

Read More »

வீராங்கனைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து: இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார், மூர்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் மொத்தம் ரூ.46 கோடி பரிசுத்தொகைக்கான பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி மிக பிரபலமாகும். இந்த போட்டிக்கு எப்போதும் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியத்துவம் அளிப்பது உண்டு. இந்த போட்டியின் இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாவும் கடந்த 2012–ம் ஆண்டு முதல் தென்ஆப்பிரிக்காவைச் முன்னாள் வீரர் ரேமண்ட் மூர் இருந்து வந்தார். அவர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘ஆண்கள் டென்னிஸ் இல்லை என்றால், பெண்கள் டென்னிஸ் இல்லை. அவர்களைத்தான் பெண்கள் டென்னிஸ் சார்ந்து ...

Read More »

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் பாகிஸ்தானை சாய்த்தது

மொகாலி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. ஹபீஸ் இல்லை 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்-10 சுற்றில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) பலப்பரீட்சை நடத்தின. நியூசிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி, டிரென்ட் பவுல்டுக்கு மறுபடியும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ் நீக்கப்பட்டு ...

Read More »

இந்திய பெண்கள் அணி 2–வது தோல்வி

தர்மசாலா, பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் ( பி பிரிவு) மோதின. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய வீராங்கனைகள், இங்கிலாந்தின் பந்து வீச்சில் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர். ஹர்மன்பிரீத் கவுர் (26 ரன்), கேப்டன் மிதாலி ராஜ் (20 ரன்) தவிர வேறு யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 90 ரன்களே ...

Read More »