Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் (page 542)

விளையாட்டுச்செய்திகள்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் மும்பைக்கு எதிராக கடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா செய்தது டெல்லி

2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில், நேற்று இரவு டெல்லியில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, மும்பை சிட்டியை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட்டுகளை அடிப்பதிலும் உள்ளூர் அணியான டெல்லி ஆதிக்கம் செலுத்தினாலும், அதிர்ஷ்டம் என்னவோ மும்பைக்கு தான் கிட்டியது. 70-வது நிமிடத்தில் மும்பை வீரர் செலிம் பெனாசோர் நீண்ட தூரத்தில் இருந்து தட்டிக்கொடுத்த பந்துடன் சக வீரர் பிரிடெரிக் பிக்யூனே கோல் நோக்கி துரிதமாக முன்னேறினார். டெல்லி கோல் கீப்பர் டோனி டோப்லாஸ் தேவையில்லாமல் ...

Read More »

தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர்சிங்கின் வெற்றி தொடருமா?-இங்கிலாந்து வீரருடன் இன்று மோதல்

இந்திய குத்துச்சண்டை வீரரான 30 வயது விஜேந்தர்சிங் கடந்த மாதம் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் அடியெடுத்து வைத்தார். இங்கிலாந்தை சேர்ந்த குத்துச்சண்டை மேம்பாட்டு நிறுவனத்துக்காக களம் கண்டு வரும் விஜேந்தர்சிங் தனது அரங்கேற்ற தொழில்முறை பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் சோனி ஒயிட்டிங்கை 3-வது ரவுண்டில் நாக்-அவுட் செய்து அசத்தினார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 2-வது பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் டீன் ஜிலெனை எதிர்கொள்கிறார். இந்த போட்டி அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் நகரில் இன்று நடக்கிறது.

Read More »

மொகாலி டெஸ்ட் போட்டி: அஸ்வினின் 2 அசத்தல் சாதனைகள்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேபோல், தென் ஆப்பிரிக்கா அணியை 184 ரன்களுக்குள் இந்திய வீரர்கள் சுருட்டினர். அதில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அஸ்வின் பல்வேறு முக்கிய சாதனைகளை செய்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை தனதாக்கி ...

Read More »

செல்போனை திருடிச் சென்ற நபரை மடக்கி பிடித்த செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்காவில் உள்ள சீன உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். 4 பேர் அமரக்கூடிய அந்த மேஜையில் இரண்டு பேர் மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது செரீனாவின் மேஜை அருகில் ஒரு நபர் வந்து நின்றார். அவர் சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த செரீனா வில்லியம்ஸ் அவரது நடவடிக்கைகளை ...

Read More »

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தி கோவா அணி முதலிடம்

8 அணிகளுக்கு இடையிலான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று  நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. சம பலம் வாய்ந்த சென்னை, கோவா அணிகள் மோதிய இந்த போட்டி மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இறுதிவரை யாராலும் நேரடியாக கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் கோவா அணி ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றியது. அதனால், இந்தப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் கோவா அணி, ...

Read More »

ஏ டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி வெற்றி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 15-25, 25-19, 25-17, 21-25, 15-11 என்ற செட் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 25-18, 25-22, 19-25, 25-19 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை வென்றது.

Read More »