Templates by BIGtheme NET

விளையாட்டுச்செய்திகள்

சியெட் கிரிக்கெட் விருதுகள்: 2014-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு

மும்பை, மே 26- கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான சியெட் கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக ராகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் சிறந்த சர்வதேச வீரராக இலங்கையின் குமார் சங்ககரா தேர்வு செய்யப்பட்டார். அதே போல் உள்ளூர் போட்டிகளில் கலக்கியதற்காக வேக பந்து வீச்சாளர் வினேய் குமார் விருது பெற்றார். ஒரு நாள் போட்டியில் 264 ரன்கள் அடித்ததற்காக ரோகித் சர்மாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் கலக்கிய ...

Read More »

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இருக்க வேண்டும்: பிளமிங் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நாங்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்க வேண்டும். இது கேப்டன் டோனியின் முடிவு அல்ல. அணியின் ஒட்டு மொத்த முடிவும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த முடிவு தவறாக அமைந்து விட்டது என்பதை ஒப்புக் கொள்கிறேன். கொல்கத்தா ஆடுகளத்தில் 2–வதாக பேட்டிங் செய்தால் வெற்றி பெறலாம் என்றும் கருதி இந்த முடிவை எடுத்தோம். ...

Read More »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி ரத்து?: கிரிக்கெட் வாரியம் திட்டம்

மும்பை, மே. 26– ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து சாம்பியன்ஸ் ‘லீக்’ 20 ஓவர் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2009–ம் ஆண்டு இந்த போட்டி முதல் முறையாக நடத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து ‘சாம்பியன்ஸ் லீக்’ போட்டியை நடத்துகின்றன. இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன. நியூசவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் தலா 1 முறை சாம்பியன் பட்டம் பெற்றன. ...

Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ், ரட்வன்ஸ்கா முதல் சுற்றிலேயே தோல்வி – முர்ரே, அசரென்கா முன்னேற்றம்

பாரீஸ், மே. 26– கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 15–ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். அவர் 6–7 (5–7), 1–6 என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த ஸ்டெப் ஹென்சிடம் தோற்றார். இதேபோல முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ரட்வன்ஸ்காவும் (போலந்து) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். ஜெர்மனியை சேர்ந்த அன்னிகா பெக் 6–2, 3–6, 6–1 என்ற கணக்கில் ரட்வன் ஸ்காவை வீழ்த்தினார். 27–ம் ...

Read More »

மொனாக்கோ கார்பந்தயத்தில் ராஸ்பெர்க் முதலிடம்

மான்ட்கார்லோ, மே.25- இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 19 சுற்றுகளை கொண்டது. இதன் 6-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப் பாய்ந்தனர். இதில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) 260.520 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 49 நிமிடம் 18.420 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 2-வது வெற்றி இதுவாகும். ஜெர்மனியின் செபாஸ்டியன் ...

Read More »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப் எளிதில் வெற்றி

பாரீஸ், மே.25- ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இது களிமண் தரை ஆடுகளத்தில் நடக்கும் போட்டியாகும். ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்சாண்ட்ரோ பல்லாவை (கொலம்பியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். வெற்றியை பெற பெடரருக்கு 1 மணி 49 நிமிடங்கள் தேவைப்பட்டது. மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-2, 6-3 என்ற ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.