Home » விளையாட்டுச்செய்திகள் (page 4)

விளையாட்டுச்செய்திகள்

World-Cup-cricket-South-Africa--West-Indies-matchCanceled

உலக கோப்பை கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

சவுதம்டன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்ஆப்பிரிக்க அணி 7.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 29 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுகீட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையிடையே, தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

Read More »
I-dont-know-why-I-was-ruled-unfit-when-I-was-fit-to-play

உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் – ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான முகமது ஷாசத், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டங்களில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்திற்கு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடது முழங்காலில் காயம் அடைந்துள்ள அவர் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷாசத், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ...

Read More »
Will-the-South-African-team-rise-up--Confrontation-with

தென்ஆப்பிரிக்க அணி எழுச்சி பெறுமா? – வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்

சவுதம்டன், உலக கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீசுடன் மல்லுகட்டுகிறது. பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியுள்ள தென்ஆப்பிரிக்க அணி, எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியில் பரிதவிக்கிறது. கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் ஆகியோரைத் தவிர மற்றவர்களின் பேட்டிங் மிகவும் கவலைக்குரிய வகையில் ...

Read More »
Rohit-Sharma-and-Shikhar-Dhawan-set-the-record-for-the

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை

லண்டன், உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தனர். அதன் விவரம் வருமாறு:- * உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். 1999-ம் ஆண்டு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஜய் ஜடேஜா சதம் (100 ரன்) அடித்திருந்தார். * இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்த ...

Read More »
Win-the-French-Open-12th-time-Nadal-record

பிரெஞ்ச் ஓபனை 12-வது முறையாக வென்று நடால் சாதனை

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரர் டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) பலப்பரீட்சை நடத்தினர். ‘களிமண் தரை’ போட்டிகளில் நானே ராஜா என்பதை நடால் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார். டொமினிக் திம்மால், நடாலுக்கு சவால் கொடுக்க முடிந்ததே தவிர அவரது ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ...

Read More »
Womens-World-Cup-Football-Brazil-team-win

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: பிரேசில் அணி வெற்றி

பாரீஸ், 24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை சாய்த்தது. பிரேசில் வீராங்கனை கிறிஸ்டியன் ரோஸிரா (15, 50, 64-வது நிமிடம்) மூன்று கோல்களையும் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மற்ற ஆட்டங்களில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் (சி பிரிவு), நார்வே 3-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவையும் (ஏ பிரிவு) ...

Read More »