Home » விளையாட்டுச்செய்திகள் (page 30)

விளையாட்டுச்செய்திகள்

All-India-Volleyball-Customs-Team-Champion

அகில இந்திய கைப்பந்து: சுங்க இலாகா அணி ‘சாம்பியன்’

சென்னை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் சுங்க இலாகா (சென்னை) அணி 19-25, 25-23, 25-22, 21-25, 16-14 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ...

Read More »
Womens-World-Cup-Football-Sweden-retaliated-Germany

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனியை பழிதீர்த்தது சுவீடன்

பாரீஸ், 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 2 முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்த நிலையில், 48-வது நிமிடத்தில் சுவீடனின் பிளாக்ஸ்டெனியஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார். பெரிய தொடர்களில் சுவீடன் அணி, ஜெர்மனியை வீழ்த்துவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். மேலும், ...

Read More »
One-Off-Day-And-Everyone-Starts-Talking-Virat-Kohli-Comes

டோனி ஒரு லெஜண்ட்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி

மான்செஸ்டர், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. முன்னதாக, இந்தப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலி (76 ரன்கள்) மற்றும் டோனி (61 பந்துகளில் 56 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்ட்த்தால் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் சேர்த்தது. ஆட்ட நாயகன் விருதை கேப்டன் கோலி பெற்றார். ...

Read More »
South-Africa-Sri-Lankan-teams-Today-Match

தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இன்று மோதல்

செஸ்டர் லீ ஸ்டிரிட், உலக கோப்பை கிரிக்கெட்டில் செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவில்லை என்று 6 புள்ளிகள் பெற்றுள்ள இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான். அடிக்கடி கேப்டன்கள் மாற்றம், போதிய அனுபவம் கிடையாது, சொல்லிக்கொள்ளும்படியான அதிரடி சூரர்களும் இல்லை. இப்படி எந்தவித ...

Read More »
In-international-cricket-Crossing-20-thousand-runs-Wacky

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு

உ லக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 37 ரன்கள் எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) 20 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக கடந்த வீரர் (417-வது இன்னிங்ஸ்) என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஜாம்பவான்கள் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆகியோர் தங்களது 453-வது இன்னிங்சில் இந்த ...

Read More »
All-India-Volleyball-South-Central-Railway-Team-Eligible-for

அகில இந்திய கைப்பந்து: தென் மத்திய ரெயில்வே அணி அரைஇறுதிக்கு தகுதி

சென்னை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி 25-21, 25-20, 21-25, 25-22 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். (சென்னை) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் தென் மத்திய ரெயில்வே அணி 25-14, 25-15, 21-25, 25-15 என்ற செட் ...

Read More »