Home » விளையாட்டுச்செய்திகள் (page 3)

விளையாட்டுச்செய்திகள்

icc-cricket60582

பந்து தாக்கி விரலில் காயம்: ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார் – இந்திய அணிக்கு பின்னடைவு

லண்டன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து தாக்கியதில் கைவிரலில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார். இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 109 ...

Read More »
Will-the-Australian-team-recover-from-the-collapse--Today

ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீளுமா? – பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

டவுன்டான், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த ...

Read More »
In-Chennai-Football-training-for-SDAD-students

சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி

சென்னை, சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவ, மாணவிகளுக்கு ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் கால்பந்து பயிற்சி அளித்தார். சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு துணைத்தூதரகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு 3 நாட்கள் சிறப்பு கால்பந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் பயிற்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) விடுதியில் தங்கி படிக்கும் 339 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜெர்மனி நாட்டின் பெண் கால்பந்து ...

Read More »
Indian-team-will-win-the-World-Cup--Ashwin-believes

உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை

சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். தற்போது அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அந்த அறக்கட்டளை சார்பில் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக செலவு பிடிக்கும். அந்த சிரமத்தை நானும் சந்தித்து இருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறது. அதற்கு பிரதிபலன் ...

Read More »
BangladeshSri-Lanka-teams-clash-today

வங்காளதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்

பிரிஸ்டல், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன. மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் ...

Read More »
World-Hockey-Series-Indian-team-qualify-for-semifinal

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

புவனேசுவரம், 2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங் 3 கோலும், மன்தீப் சிங், வருண்குமார் தலா 2 கோலும், குர்சாகிப்ஜித் சிங், நீலகண்ட ஷர்மா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் ...

Read More »