Home » விளையாட்டுச்செய்திகள் (page 20)

விளையாட்டுச்செய்திகள்

South-African-cricket-team-The-country-returns-today

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்புகிறது

இரு அணிகளுக்கும் இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 2 ஆட்டங்கள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை ரசிகர்கள் இன்றி நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தனர். பின்னர் இந்த போட்டி தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் லக்னோவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். கொரோனா வைரஸ் பயத்தால் அவர்கள் எங்கும் ...

Read More »
Only-by-Rohit-Sharma-Double-centuries-can-hit-Brad-Hogg-says

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் பிராட் ஹாக் சொல்கிறார்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த வீரராலும் இரட்டைசதம் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிரஞ்ச், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த போதிலும் அவரால் இரட்டை சதத்தை எட்டமுடியவில்லை. அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ...

Read More »
IPL-Cup-Gives-pleasure-Tamil-football-player-Soosairaj-is

ஐ.எஸ்.எல். கோப்பையை கையில் ஏந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக கால்பந்து வீரர் சூசைராஜ் பெருமிதம்

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இறுதிப்போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதிப்போட்டி ரசிகர்கள் அனுமதியின்றி அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டத்தை வென்ற அட்லெடிகோ டி கொல்கத்தா அணியில் இடம் பிடித்து இருந்த மைக்கேல் சூசைராஜ், ரெஜின் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ...

Read More »
Corona-fears-Indian-Olympic-Association-postponement-of

கொரோனா அச்சம்: இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி விட்டதால், கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விளையாட்டு உலகமும் கொரோனாவினால் சீர்குலைந்து போய் கிடக்கிறது. அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச போட்டிகள் எதுவும் கிடையாது. விளையாட்டு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் ரத்து, தள்ளிவைப்பு தொடர் கதையாகிறது. இதனால் விளையாட்டு ரசிகர்கள் தங்களது பொழுது போக்கு இனி என்ன? என்று ஒரு பக்கம் சமூக வலைத்தளத்தில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ...

Read More »
He-Champion-after-10-years-Sarathkamal

10 ஆண்டுக்கு பிறகு பட்டம் வென்றார், சரத்கமல்

சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 37 வயதான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 2010-ம் ஆண்டு எகிப்து ஓபனை வென்ற பிறகு சொந்தமாக்கிய முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

Read More »
Super-Division-hockeyi-Income-Tax-Team-Success

சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமான வரி அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுக கழகத்தை வீழ்த்தியது. வினோத் ராயர், அஜித்குமார், அருள் ஸ்டாலின் டேவிட் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 ...

Read More »