Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் (page 2)

விளையாட்டுச்செய்திகள்

World-Badminton-final-round-Sindhu-win-in-the-opening-match

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் சிந்து வெற்றி

குவாங்சோவ், ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள். பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று ...

Read More »
We-need-to-keep-pace-bowlers-like-racing-horses--says

வேகப்பந்து வீச்சாளர்களை பந்தய குதிரைகளை போல் பாதுகாக்க வேண்டும் – பரத் அருண் சொல்கிறார்

பெர்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 7.50 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்கும். இதையொட்டி பெரும்பாலான இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி ஆட்டத்தின் போது இடது கணுக்காலில் காயமடைந்த பிரித்வி ஷா, முதலாவது டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த ...

Read More »
IndiaNetherlands-teams-face-defensive-World-Cup-today

உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

புவனேஸ்வரம், 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. முதலில் மாலை 4.45 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தது. நெதர்லாந்து அணி லீக் சுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது ...

Read More »
Pujara-and-Williamson-progress-in-Test-batsmen-rankings

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம் – கோலியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 89, 139 ரன்கள் வீதம் எடுத்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்ட வில்லியம்சன் 37 புள்ளிகளை சேகரித்து தனது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கையை 913 ஆக உயர்த்தி இருக்கிறார். நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் 900 புள்ளிகளுக்கு மேல் குவித்து ...

Read More »
The-committee-headed-by-Kapil-Dev-to-select-a-trainer-for

பெண்கள் அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் கமிட்டி

மும்பை, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20-ந்தேதி மும்பையில் நடக்கிறது. சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளரை தேர்வும் செய்யும் பணியில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்ததால், முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், இந்திய முன்னாள் வீராங்கனை ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் ...

Read More »
World-Badminton-final-round-competition--starting-today-in

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி – சீனாவில் இன்று தொடக்கம்

குவாங்சோவ், ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் ...

Read More »