Home » விளையாட்டுச்செய்திகள் (page 12)

விளையாட்டுச்செய்திகள்

Tennis-Ranking-AchievementAshley-Barty-whos-number-one

டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி

பர்மிங்காம், பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் அரியணையில் அமருகிறார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் ...

Read More »
All-India-Volleyball-Tournament-with-16-teams

16 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 46–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 30–ந்தேதி வரை நடக்கிறது. தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடகா, வருமானவரி (குஜராத்), இந்தியன் வங்கி, சுங்க இலாகா, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஐ.சி.எப், வருமானவரி (சென்னை), தமிழ்நாடு போலீஸ், செயின்ட் ஜோசப் என்ஜினீயரிங் கல்லூரி, எஸ்.டி.ஏ.டி. ஆகிய அணிகளும், பெண்கள் ...

Read More »
Pakistan-teamWinning-the-2ndSouth-Africa-is-out

பாகிஸ்தான் அணி 2-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேறியது

லண்டன், உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது வெற்றியை ருசித்தது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. சிறப்பான தொடக்கம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நேற்று நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது. பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து சொதப்பிய சோயிப் மாலிக், ஹசன் அலி கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ...

Read More »
World-Cup-Cricket-India-won-the-toss-and-elected-to-bat

உலக கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

சவுதம்டன், 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் சவுதம்டனில் இன்று நடக்கும் 28வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக காணப்படும் இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காத அணிகளில் ஒன்றாகும். ...

Read More »
Sanias-Olympic-program

சானியாவின் ஒலிம்பிக் திட்டம்

ஐதராபாத்தில் உள்ள சானியா மிர்சாவின் வீட்டில் ஆனந்தம் விளையாடுகிறது. சானியா- சோயிப் மாலிக் தம்பதியின் குட்டி வாரிசு இஸான், தனது முதல் ரம்ஜானை கொண்டாடி முடித்திருக்கிறான். அந்த மகிழ்வும் நிறைவும் இஸானின் புகழ்பெற்ற அம்மா உள்ளிட்ட அனைவர் முகத்திலும் வழிகிறது. சானியாவின் பேட்டி… கடந்த ரம்ஜான், உங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆகிவிட்டது… ஆம், நான் என் மகன் இஸானுடன் கொண்டாடும் முதல் ரம்ஜான் என்பதால், இயல்பாகவே அது ஸ்பெஷல் ஆகிவிட்டது. இஸானின் அம்மாவாக இருப்பதும், ஐதராபாத்தில் அவனுடன் ரம்ஜானை கொண்டாடியதும் அற்புதமான விஷயங்கள். ஒரே ...

Read More »
To-Sri-Lanka-Buckled-EnglandMalinga-Great-bowling

இலங்கையிடம் பணிந்தது இங்கிலாந்துமலிங்கா அபார பந்து வீச்சு

லீட்ஸ், உலக கோப்பை கிரிக்கெட்டில், அசுர பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் இலங்கையிடம் பணிந்தது. அதிர்ச்சி தொடக்கம் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லீட்சில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மல்லுகட்டியது. இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் கருணாரத்னேவும், விக்கெட் கீப்பர் குசல் ...

Read More »