Home » விளையாட்டுச்செய்திகள் (page 11)

விளையாட்டுச்செய்திகள்

Pakistan-in-a-compulsory-victory-crisis--Todays-clash-with

கட்டாய வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்

பர்மிங்காம், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டி விட்டது. பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தானுக்கு ...

Read More »
Will-Australias-dominance-continue--Clash-today-with

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? – இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

லண்டன், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகளை தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை ...

Read More »
Copa-America-Football-Beat-Qatar-and-qualify-for-the

கோபா அமெரிக்கா கால்பந்து: கத்தாரை வீழ்த்தி அர்ஜென்டினா கால்இறுதிக்கு தகுதி

சால்வாடோர், 12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆசிய சாம்பியனான கத்தாரை எதிர்கொண்டது. அர்ஜென்டினா அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மார்டினஸ் இந்த கோலை அடித்தார். 72-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த ...

Read More »
World-Cup-Football-England-France-advance-to

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், 24 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) இங்கிலாந்து-கேமரூன் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டீபானி ஹவுட்டன் 14-வது நிமிடத்திலும், எலென் ஒயிட் 45-வது நிமிடத்திலும், அலெக்ஸ் கிரீன்வுட் 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ...

Read More »
State-Senior-Athlete-St-Josephs-Team-Champion

மாநில சீனியர் தடகளம்: செயின்ட் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’

திருச்சி, 92-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 1,450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்பட வீரர்-வீராங்கனைகளுக்கு தனித்தனியாக 23 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 228 புள்ளிகளை குவித்த செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) அணி 128 புள்ளிகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தது. ...

Read More »
Will-Afghanistan-start-the-winning-streakTodays-clash

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கணக்கை தொடங்குமா? வங்காளதேச அணியுடன் இன்று மோதல்

சவுதம்டன், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுதம்டனில் இன்று நடக்கும் 31–வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் வங்காளதேச அணிக்கு, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் பெரிய அளவில் கடினமாக இருக்காது. என்றாலும் ...

Read More »