Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள் (page 10)

விளையாட்டுச்செய்திகள்

Pro-volleyball-Kochi-teams-2nd-win

புரோ கைப்பந்து: கொச்சி அணி 2-வது வெற்றி

கொச்சி, முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணி 10-15, 15-11, 11-15, 15-12, 15-12 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்சை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. ஆமதாபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும். இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்- ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் மேலாளர் ...

Read More »
Davis-Cup-Tennis-IndiaPakistan-conflict

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் இந்த போட்டி பொதுவான இடத்தில் செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும்.

Read More »
Kozhikode-team-trophy-win-in-Pro-Volleyball

புரோ கைப்பந்து போட்டியில் கோழிக்கோடு அணி ‘திரில்’ வெற்றி

கொச்சி, முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும். இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக ...

Read More »
Cummins-Holders-progress-in-Test-rankings

டெஸ்ட் தரவரிசையில் கம்மின்ஸ், ஹோல்டர் முன்னேற்றம்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (882 புள்ளி) முதலிடம் வகிக்கிறார். கான்பெர்ராவில் நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (878 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் குறைந்து 3-வது இடத்துக்கு இறங்கினார். ...

Read More »
IndiaNew-Zealand-first-T20-match-Wellington-Today-start

இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: வெலிங்டனில் இன்று நடக்கிறது

வெலிங்டன், இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் 20 ஓவர் தொடருக்கு இந்திய அணியை முழுமையாக ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். ஒரு நாள் தொடரை சொந்தமாக்கிய உற்சாகத்தில் புது தெம்புடன் களம் ...

Read More »
Sarfraz-Ahmad-will-be-the-captain-of-the-World-Cup--the

உலக கோப்பை போட்டி வரை சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நீடிப்பார் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே டர்பனில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது விக்கெட்டுக்கு வான்டெர் துஸ்சென், பெலக்வாயோ ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெலக்வாயோ பேட்டிங் செய்கையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அவரை நோக்கி கருப்பு வீரரே என்று பேசியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி ...

Read More »