Templates by BIGtheme NET
Home » விளையாட்டுச்செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்

Will-the-Bengalore-team-win-Today-clash-with-Punjab-team

பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

பெங்களூரு, முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த 2 ஆட்டங்களில் (கொல்கத்தா மற்றும் சென்னைக்கு எதிராக) தொடர்ச்சியாக நூலிழை வித்தியாசங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களில் ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டிய நெருக்கடியுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு உள்ளூரில் ஆடுவது சற்று சாதகமான விஷயமாகும். அது மட்டுமின்றி இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணியை அவர்களது இடத்தில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் பெங்களூரு ...

Read More »
Asian-Badminton-Saina-Sindhu-won-Titles

ஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா?

யுஹான், 39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். ஆசிய பேட்மிண்டன் போட்டியில் 1965-ம் ஆண்டில் இந்தியாவின் தினேஷ் கண்ணா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு இந்தியர்கள் யாரும் இங்கு மகுடம் சூடியதில்லை. 54 ஆண்டுகால அந்த ஏக்கத்தை சாய்னா, சிந்து தணிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியில் 3 முறை வெண்கலப்பதக்கம் ...

Read More »
Im-sorry-to-get-a-place-in-World-Cup-squad--Interview

‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 7-வது வெற்றியை தனதாக்கியது. இதில் ரஹானேவின் (105 ரன்) சதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் நிர்ணயித்த 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்தது. ரிஷாப் பான்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு ...

Read More »
Bajrang-Pooniya-won-the-gold-medal-in-Asian-Wrestling

ஆசிய மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

ஸியான், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஸியான் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் பஜ்ரங் பூனியா எதிர்பார்த்தபடியே தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். 65 கிலோ உடல் எடைப்பிரிவின் பிரீஸ்டைல் பிரிவில் தனது தொடக்க கட்ட ஆட்டங்களில் பெய்மான் பியாபானி (ஈரான்), சார்லஸ் பெர்ன் (இலங்கை) ஆகியோரை தோற்கடித்த பஜ்ரங் பூனியா அரைஇறுதியில் 12-1 என்ற புள்ளி கணக்கில் சிரோஜிதின் காசனோவை (உஸ்பெகிஸ்தான்) புரட்டியெடுத்தார். இதைத் தொடர்ந்து நடந்த இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் சயட்பெக் ஒகாசோவை எதிர்கொண்டார். ...

Read More »
IPL-cricket-ChennaiHyderabad-teams-clash-again-Chepak

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்: சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்து விடும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 ...

Read More »
In-Asian-athletics-competition-Tamil-Nadu-Player-Gomathi-won

ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்

தோகா, 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் ...

Read More »