Home » வர்த்தகம் செய்திகள் (page 5)

வர்த்தகம் செய்திகள்

spicejet

மே மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் புதிய விமானங்களை இயக்கவுள்ளது

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மே 17 முதல் மும்பையிலிருந்து பாங்காங்கிற்கு நேரடியாக விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன் வெளியிட்ட அறிக்கையில் துபாய்க்கு அடுத்து சர்வதேச விமான நிலையமாக பாங்காங் மாறியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் பாங்காக் நகரத்திலிருந்து அஹமதாபாத், அம்ரிஸ்டர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடி விமான சேவையை செய்து வருகிறது. ஏப்ரல் 18 முதல் திட்டமிட்டு 6 விமானங்கள் மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கும் சென்னையிலிருந்து வாரணாசிக்கும் இடையே இயக்க திட்டமிட்டு உள்ளது.

Read More »
monsoon-paddy-field-bhubaneswar---reuters

இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மைய தகவல்

New Delhi:  இந்தியாவில் பருவ மழைப்பொழிவு இந்த ஆண்டு சாதாரண அளவிலேயே இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பண்ணை பொருளாதாரம் 2.6 டிரில்லியன் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. “பசிபிக் பெருங்கடலில் சராசரியை விட வெப்பம் அதிகமாகி விட்டது, மார்ச் -மே மாதங்களில் எல் நினோவின் (El Nino) 80 சதவிகிதம் என்பது ஜூன் முதல் ஆகஸ்டு வரை 60 சதவிகிதமாக குறைந்து விடுகிறது.”என்று ஸ்கைமெட்டின் நிர்வாக இயக்குநர் ஜாட்டின் சிங் தெரிவித்தார். ”இதன் அர்த்தம் பருவத்தில், இந்த 2019 ...

Read More »
micromax-news

பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் புதிதாக பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்துள்ளார். ராகுல் சர்மாவின் நிறுவனமான ரெவோல்ட் இன்டெலிகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனி நபர் போக்குவரத்துக்கு கட்டுபடியாகும் விலையிலான வாகனத்தை தயாரிக்கும் என்று குறிப்பிட்ட அவர் இதற்குரூ. 500 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டரி வாகன தயாரிப்பு ...

Read More »
tvs-business-news

டிவிஎஸ் ரேடியான் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை

டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான் பைக் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) அனிருத்தா ஹல்தார் தெரிவித்துள்ளதாவது: ரேடியான் 110சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 7 மாதங்களுக்குள்ளாகவே அதன் விற்பனையானது 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. முதல் தரமான அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, சொகுசான பயண அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடையே ரேடியான் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் காரணமாகவே, பல்வேறு பிரிவுகளில் அது விருதுகளை வென்றுள்ளது என்று அனிருத்தா தெரிவித்துள்ளார்.

Read More »
bajaj-business

பஜாஜ் ஆட்டோ விற்பனை 18% உயர்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மார்ச் மாத வாகன விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பஜாஜ் ஆட்டோ மார்ச் மாதத்தில் 3,23,538 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான 2,69,939 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை 64,409-லிருந்து 8 சதவீதம் அதிகரித்து 69,813-ஆக இருந்தது. ஏற்றுமதி 1,30,748 வாகனங்களிலிருந்து 3 சதவீதம் அதிகரித்து 1,34,166-ஆக காணப்பட்டது. மார்ச் 31-ஆம் ...

Read More »
sensex-April

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து ஆதாயத்தை எட்டியுள்ளன

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 11,650புள்ளிகள் உள்ளது. டாட்டா கன்சல்டென்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்ம் கோடாக் மஹிந்திரா பேங்க், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றை வாங்க கவனம் செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எஃப்எம்சிஜி ஹெவிவெயிட்ஸான ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் ஐடிசி ஆகியவை அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. சென்செக்ஸ் 0.54 சதவீதம் அல்லது 213 புள்ளிகள் அதிகரித்து 38,897.48 மற்றும் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.57 சதவீதம் அல்லது ...

Read More »