Home » வர்த்தகம் செய்திகள் (page 40)

வர்த்தகம் செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்: ஏப்ரல் 20-ல் விளக்கம் அளிக்க உத்தரவு

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண் டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கிகளில் நவம்பர் 10-ம் தேதி முதல் பழைய நோட்டுகள் பெறப்பட்டன. இவ்விதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை எவ்வளவு? பண மீட்பு நடவடிக்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற குழு கோரியுள்ளது. ...

Read More »

2016-ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போன் ஐபோன் 6எஸ்

2016-ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போன் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்கள் பெற்றுள்ளன. இதுகுறித்து ஐஹெச்எஸ் மார்கிட் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில், ”ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தேவையான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய வசதிகளோடு, ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு பழைய சாதனங்களை விற்பதிலும் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ...

Read More »

ஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் என நம்பிக்கை இருக்கிறது. இதன் மூலம் பொருட்களின் விலை குறை யும் மற்றும் வரி ஏய்ப்பும் தடுக்கப் படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். காமன்வெல்த் நாடுகளுக்கான தலைமை தணிக்கை அதிகாரிகளின் 23-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜேட்லி மேலும் கூறியதாவது: வரி செலுத்தாத சமூகமாகவே இந்தியா இருந்து வருகிறது. இதன் காரணமாக பண மதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டு, ரொக்க பணப்புழக்கம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ...

Read More »

அமெரிக்க வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கவில்லை: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது. இது குறித்து இந்திய அரசு தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வேலைகளை இந்தியர்கள் பறிக்கவில்லை. மாறாக இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்ட ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது: இந்தியாவின் கருத்தினை அமெரிக்க அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இந்தியர்கள் அமெரிக்க வேலைகளை பறிக்கவில்லை என்பதையும் அமெரிக்கா புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா ...

Read More »

உலக மசாலா: டிஸ்னி திரைப்படத்தில் வரும் மந்திர ரோஜா போலிருக்கிறதே!

லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம், 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது. 100% இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனா லும் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக் குள் அப்படியே இருக்கும். எப்பொழுதாவது கண் ணாடிக் குடுவையை எடுக்க நேர்ந்தாலும் ரோஜாக்கள் அப்படியேதான் இருக்கின்றன. 30 கண்கவர் நிறங்களில் ரோஜாக்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த வாடாத ரோஜாக்களின் விலை மிகவும் அதிகம். 13 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து ...

Read More »

வணிக நூலகம்: சுயமரியாதையை தாங்கும் ஆறு தூண்கள்

வாழ்க்கையில் சில நேரங்களில் தவறுகளும் சில நிகழ்வுகளும் ஒருவருடைய மரியாதையை கூட்டும் அல்லது குறைக்கும். ஒருவர் மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றிய பாதிப்புகளை நினைத்து வருந்தக் கூடாது. நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்ற எண்ணம் நம் செயல்களின் வெளிப்பாடுகளில் இருக்க வேண்டும். சந்தோஷம் என்பது வலிகள் குறைந்து மகிழ்ச்சி மிகுந்து இருப்பது ஆகும். சந்தோஷம் என்பது ஒரு நிலை அந்த நிலையில் மகிழ்ச்சியை பிடித்துக் கொண்டு இருந்தால் நம்பிக்கை வளரும், தோல்வியில் துவண்டு போக மாட்டார்கள். தன்னைப் பற்றிய மதிப்பீடுகளும் ...

Read More »