Home » வர்த்தகம் செய்திகள் (page 22)

வர்த்தகம் செய்திகள்

goldd-chain

90 நகை வியாபாரிகளிடம் மட்டும் ஏமாந்த கடன் ரூ.5,000 கோடி

புதுடெல்லி: வைரம் மற்றும் நகை தொழிலில் உள்ளவர்களிடம் வங்கிகள் ரூ.5,000 கோடியை கடனாக வழங்கி ஏமாந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி 11,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததை தொடர்ந்து, கடன் பாக்கிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நகை தொழிலில் ஈடுபடுபவர்களிடம் வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்துள்ளன. இதில் எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என ஆராய தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இதுதொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இதில், பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் ...

Read More »
share-market

பங்குச் சந்தையில் திடீர் விறுவிறுப்பு சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு

சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்தது. மார்ச் மாதத்துக்கான முன்பேர பங்கு வர்த்தக தொடக்கம் சந்தைக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவித்தது. இதன் எதிரொலியாக, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில் தங்களது முதலீட்டை கணிசமாக அதிகரித்தன. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின்போது அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் ஏற்றமுடன் காணப்பட்டன. குறிப்பாக, உலோகம், மருந்து, உள்கட்டமைப்பு, ...

Read More »
chiecken-legpiece-from-uS

தமிழகத்தில் கறிக்கோழி தொழில் பாதிக்கும் அபாயம் அமெரிக்க லெக்பீஸ் இந்தியாவில் இறக்குமதி?

நாமக்கல்: அமெரிக்கா லெக்பீஸ் இந்தியாவுக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் கறிக்கோழி தொழில் பாதிக்கும் நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோவை, பல்லடம், நாமக்கல், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மாபுரி, அரூர் ஆகிய ஊர்களில் அதிக அளவில் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில், சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழிகளை பெரிய தனியார் நிறுவனங்கள் ...

Read More »
fuel-petrol-diesel-price-hike

பிப்ரவரி 24 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.16; டீசல் ரூ.65.51

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.51-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. #Petrol #Diesel

Read More »
coca-cola

புதிய வகை பழரச பான அறிமுகத்தில் கோக-கோலா தீவிரம்

புதிய வகை பழரச பானங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக கோக-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (இந்தியா-தென்மேற்கு ஆசியா) டி. கிருஷ்ணகுமார் கூறியதாவது: இந்தியாவில் எங்களது தயாரிப்புகளை பரவலாக்கும் எண்ணத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்பு வாய்ந்த புதிய வகை பழரச பானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மாம்பழத்தை வைத்து மாஸா பானங்களை விற்பனை செய்து வருவதைப் போல இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாண்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரத்யேகமான மாம்பழ தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளோம். குறிப்பாக, ...

Read More »
hcl-software-company

இந்திய ஐடி துறையை புரட்டிப் போட்ட அப்பாவும்.. மகளும்..!

சென்னை: தமிழகத்தின் சிறு கிராமத்தில் இருந்து சென்று இந்தியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறை வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் வெற்றிப் பாதையை இங்குப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் நாம் ஹெச்.சி.எல் நிறுவனம் எப்போது துவங்கப்பட்டது, அதன் முதலீடு எவ்வளவு என்பது உட்படப் பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கு உங்களுக்காகச் சுருக்கமாக வழங்குகின்றோம். தமிழகத்தில் எளிமையான இந்து குடுப்பத்திற்குப் பிறந்த ஷிவ் நாடார் உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் பிரபலமான ஒருவர் ...

Read More »