Home » வர்த்தகம் செய்திகள் (page 21)

வர்த்தகம் செய்திகள்

royal-enfield

ராயல் என்ஃபீல்டு விற்பனை 25%-ஆக அதிகரிப்பு

ஐஷர் மோட்டார்ஸின் இரு சக்கர வாகன பிரிவான ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 25 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சென்ற பிப்ரவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு விற்பனை 73,077-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 58,439 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் ஏற்றுமதி 1,702 என்ற எண்ணிக்கையிலிருந்து 1 சதவீதம் உயர்ந்து 1,723-ஆக இருந்தது என ராயல் என்ஃபீல்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More »
bsnl-3g

ரூ.333 கோடி செலவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்3ஜி மொபைல் சேவை விரிவாக்கம்

ரூ.333 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் கள் உள்ளனர். இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரூ.333 கோடியில் 3ஜி மொபைல் சேவையை விரிவுபடுத்துவது மற்றும் 2ஜி சேவை யின் தரத்தை உயர்த்தும் பணிகளை தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொதுமேலாளர் ...

Read More »
Business

தொழில் ரகசியம்: உறவுகளை பலப்படுத்தும் சிரிப்பு

தனியாய் டீவியில் காமெடி சீன்கள் பார்க்கும் போது சிரிப்பதை விட மற்றவர்களோடு பார்க்கும் போது அதிகம் சிரிக்கிறோம் என்பதை கவனித்திருக்கிறீர்களா? தனியாய் இருக்கும் போது நமக்கு நாமே பேசிக்கொள்கிறோம், அளவோடு புன்னகைத்து கொள்கிறோம். ஆனால் தனியாய் இருக்கும் போது அதிகம் சிரிப்பதில்லை. தனியாய் சிரித்தால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவார்களோ என்ற பயமா? இல்லை அருகில் யாராவது இருந்தால் தான் நமக்கு காமெடி புரிகிறதா? சிரிப்பைப் பற்றி ஆய்வு செய்து பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிவர்களில் ஒருவர் `ராபர்ட் ப்ரோவைன்’. `மேரிலேண்ட் பல்கலைக்கழக’த்தில் உளவியல் ...

Read More »
8cognizant-office-mepz-chennai

8,000 ஊழியர்களை வெளியேற்றியது காக்னிசென்ட்..!

இந்திய மென்பொருள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் 2017ஆம் ஆண்டில் சுமார் 8,000 ஊழியர்களைச் சத்தமே இல்லாமல் வெளியேற்றியுள்ளது. இதே காலக்கட்டத்தில் காக்னிசென்ட் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்தியா 2017ஆம் ஆண்டில் முடிவில் காக்னிசென்ட் உலகம் முழுவதும் இருக்கின்ற தனது அலுவலகங்களில் சுமார் 2,60,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1,80,000 என்பது குறிப்பிடத்தக்கது. இதே 2016ஆம் ஆண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 2,60,000ஆகவும் இந்தியாவில் 1,88,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கியது ...

Read More »
warrenbuffett

ஒரு வாரத்தில் 3.74 பில்லியன் டாலரை இழந்தார் வாரன் பபெட்..!

அமெரிக்காவின் மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தனது வட்டி விகிதத்தை மாற்றுவதில் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்கப் பங்குச்சந்தை மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ஒருவரான வாரன் பபெட் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.74 பில்லியன் டாலர் அளவிலான சொத்தை இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 3.71 ...

Read More »
bill-gates

ஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..!

பில் கேட்ஸ் என்னும் பெயர் உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதன் வாயிலாகவே அதிகமானோருக்குத் தெரிந்திருக்கிறது, இதன் பின்பே அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், மென்பொருள் வர்த்தகத்தையே மாற்றிய ஒரு சிறந்த வியாபாரி என்பதை அதன் பின்னர்த் தெரிந்துகொண்டவர்கள் ஏராளம். பில் கேட்ஸ் பில் கேட்ஸ் தலைமையில் மைக்ரோசாப்ட் அதன் போட்டி நிறுவனங்களாக ஆப்பிள், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சமானியர்களிடமும் தனது வர்த்தகத்தைக் கொண்டு சேர்த்ததன் மூலம் பல ஆண்டுகளாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்தார். மாற்றம்.. இந்நிலையில் ...

Read More »