Home » வர்த்தகம் செய்திகள் (page 19)

வர்த்தகம் செய்திகள்

face-unlock

ஸ்மார்ட்போனின் `ஃபேஸ் அன்லாக்’ வசதி பாதுகாப்பானதா?

அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதில் அதிகபட்ச பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள்தான் இப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சமாக இருக்கிறது. பட்டன்கள், கைவிரல் ரேகை என இருந்த பாதுகாப்பு வசதிகள் இப்போது முகத்தை அடையாளமாக எடுத்துக் கொள்வது வரை வந்து விட்டன. விரல் கைரேகை அல்லது பாதுகாப்பு நம்பர் அடையாளங்களைவிட இது எளிதாக உள்ளது என்கின்றனர். ஆனால் பாதுகாப்பானதா என சில கேள்விகளை எழுப்புகிறது காஸ்பர்ஸ்கை பாதுகாப்பு நிறுவனம். ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் மிகப் பொதுவானது. சில நேரங்களில் ...

Read More »
whatsapp-india

வாட்ஸ் அப் பயன்பாடு: முதலிடத்தில் இந்தியா!

கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியர்கள், சுமார் 89 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11‌ சதவிகிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 87 சதவிகிதம் இந்தோனேஷியாவும், 80 சதவிகிதம் மெக்சிகோவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Read More »
iphone-se-2-2018-launch-details

ரூ.20,000/-ஐ ரெடியாக வச்சிக்கோங்க; அடுத்த ஐபோன் பற்றி ஒரு குட் நியூஸ்.!

கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் மாதம் நாடாகும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று கூறி இருந்தது. அறியாதோர்களுக்கு, WWDC 2018 நிகழ்வானது வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். சீனாவில் இருந்து வெளியான இந்த அறிக்கையை ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ வெளியிட்ட தகவலுடன் முரண்பட்டது. அவரின் கருத்துப்படி, ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் ...

Read More »
stockmarkets-sensex-points

சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலோகத் துறை பங்குகளுக்கு தேவை அதிகரித்து அதிக விலைக்கு கைமாறியதையடுத்து வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் ஏற்றம் கண்டது. ரஷியாவின் ரஷல் நிறுவன அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்க கட்டுப்பாடுகளை விதித்தன் எதிரொலியாக சர்வதேச சந்தைகளில் அலுமினியத்தின் விலை அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா பதிலடி கொடுக்கும் என்ற நிலைப்பாட்டால் நிக்கல் உள்ளிட்ட இதர உலோகங்களின் விலையும் வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில், உற்பத்தி குறித்த அச்சப்பாட்டால் சர்வதேச ...

Read More »
bmw-new-car-intro

பிஎம்டபிள்யூ-வின் புதிய எக்ஸ்3 கார் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், முற்றிலும் புதிய எக்ஸ்3 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சமதள, கரடு முரடு என எந்த சாலையானாலும் அதில் இனிமையாக பயணிக்கும் வகையில் இப்புதிய எக்ஸ்3 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு லிட்டர்-நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8 விநாடிகளில் அடையமுடியும். தானியங்கியாக செயல்படும் எட்டு வேக நிலைகளை இப்புதிய கார் உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்பை பொருத்தவரையில் ஆறு காற்றுப் ...

Read More »
mobile-recharge-deducted-2018

பண தட்டுப்பாட்டால் மொபைல் ரீசார்ஜ் சரிவு

புதுடெல்லி: பணத்தட்டுப்பாடு காரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்வது 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணத்தட்டுப்பாடு காரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தும் சந்தாதாரர்களில் சுமார் 95 சதவீதம் பேர் பிரீபெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் ரீசார்ஜ் செய்வது தற்போது கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து மொபைல் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: 2016ம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு இதுபோன்ற நிலை ஏற்பட்டது. டீலர்கள் மூலம் ரீசார்ஜ் செய்வது ...

Read More »