Home » வர்த்தகம் செய்திகள் (page 18)

வர்த்தகம் செய்திகள்

's-new-competition-new-project

அமேசானுக்குச் சவால் விடும் முகேஷ் அம்பானி.. புதிய போட்டி, புதிய திட்டம்..!

இந்திய வர்த்தகச் சந்தை முழுவதும் நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்த அறிவிப்புகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள், தாக்கத்தை மட்டுமே ஆய்வு செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் சாம்ராஜியம் என்ன செய்யப்போகிறது என்ற திட்டத்தையும் அறிவித்துச் சந்தையின் முன்னணி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்த திட்டங்கள் என்ன..? அதன் மூலம் யாருக்குப் பாதிப்பு என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். ஆன்லைன் ...

Read More »
gold-rate-hike

எகிறப்போகிறது தங்கம் விலை: தீபாவளிக்குள் ஒரு பவுன் ரூ.34 ஆயிரமாக உயரலாம்

சர்வதேச அரசியல் சூழல்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், தீபாவளிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்தை எட்டும் வாய்ப்புள்ளது எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால்,அதை அதிகமான விலை கொடுத்து வாங்கும் பொருட்டு டாலரின் தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தேவை அதிகரித்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ரூ.67.53 காசுகளாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல், சர்வதேச அரசியல் ...

Read More »
gst-in-india

இந்தியா வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையங்களில் ஜிஎஸ்டி ரீபண்ட்:விரைவில் செயல்படுத்த முடிவு

புதுடெல்லி: வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ஜிஎஸ்டி ரீபண்ட் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளிநாட்டு பயணிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது, அதற்காக வசூலிக்கப்படும் வாட் அல்லது ஜிஎஸ்டி வரி அவர்களுக்கு திரும்ப அளிக்கப்படுகிறது. சில நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. சிலர் போலியான ரசீதுகளை காட்டி ரீபண்ட் பெறுவதை தடுக்க அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ரீபண்ட் வழங்கப்படுகிறது. இதுபோல் இந்தியாவிலும் ஜிஎஸ்டி ரீபண்ட் பெற அனுமதி உள்ளது. ஆனால், பெரிய வர்த்தகர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு ...

Read More »
automatic_car

சொகுசு பயணத்தை விரும்பும் மக்கள் ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை அபாரம்: 4 ஆண்டுகளில் 28 மடங்கு உயர்வு

புதுடெல்லி: ஆட்டோமேட்டிக் கார்களின் விற்பனை 4 ஆண்டுகளில் 28 மடங்கு உயர்ந்துள்ளது. போக்குவரத்து வசதிக்காக கார் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் கூட கார் வாங்க ஆசைப்படுகின்றனர். இதற்கேற்ப நிறுவனங்களும் புதிய மாடல்களை களம் இறக்கி வருகின்றன. வழக்கமாக கார் வாங்கும்போது எரிபொருள் திறன், விலை, பராமரிப்பு செலவு போன்றவைதான் கருத்தில் கொள்ளப்படும். இதனால் கியர் மாடல்களையே வாங்கி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பிரபல நிறுவனம் ஒன்று 2013-14 ...

Read More »
no-gst-inmalaysia

மலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..!

கோலா லம்பூர்: மலேசியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2018 ஜூன் 1 முதல் 0% என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது மலேசியாவில் 6 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 0 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அடுத்து வரும் அறிவிப்புகளில் தேசிய அளவில் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Read More »
india-money-value-decreased

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவு

மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.67.52 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.67.42 காசுகளாக ...

Read More »