Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 111)

வர்த்தகம் செய்திகள்

‘செல்பி’ மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை

‘செல்பி’ புகைப்படம் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை ‘மாஸ்டர் கார்டு’ அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்ட், ஓ.டி.பி., பின் கோட்ஸ், பிரிண்ட் சென்சார் என பல்வேறு தொழில்நுட்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இதை தடுக்க ‘செல்பி’ புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டத்தை ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் சோதனை அடிப்படையில் அறி முகம் செய்துள்ளது. இதற்காக அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடமும் ...

Read More »

ஆன்லைன் மூலம் கருப்பு பண விவரங்களை தெரிவிக்கலாம்

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான கால அவகாசத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அந்த திட்டத்தின் மூலம் தனிநபர் களோ அல்லது நிறுவனங்களோ ஆன்லைன் மூலம் கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். ஆனால் கட்டா யம் டிஜிட்டல் கையெழுத்து இருக்க வேண்டும். இந்தத் தகவல்களை நேரடியா கவோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆனால் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் போது எளிதாகவும், பாது காப்பாகவும் இருக்கும் என்றும் https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் மூத்த அதிகாரி ...

Read More »

பிளிப்கார்ட்டை முந்தியது அமேசான்

மேசான் நிறுவன இணையதளத்தை பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்நாப்டீல், பிளிப்கார்ட் ஆகிய இணையதளங்களைப் பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை விட அமேசான் இணைய தளத்தைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாதந்திர அளவில் பார்வையாளர்கள் அமேசான் நிறுவனத் துக்கு அதிகரித்துள்ளனர். இணையதள பகுபாய்வு புள்ளி விவரங்களை வெளியிடும் காம்ஸ்கோர் டேட்டா இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி அமேசான் இந்தியா தளத்துக்கு மே மாதத்தில் 2.36 கோடி பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். பிளிப்கார்ட் தளத்துக்கு 2.35 கோடி பார்வையாளர்களும், ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு 1.79 கோடி பார்வையாளர்களும் மே மாதத்தில் ...

Read More »

இவரைத் தெரியுமா?- ராமச்சந்திர என் கல்லா

அமரராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர். 1938ல் பிறந்தவர். 1985-ல் சித்தூரில் அமரராஜா நிறுவனத்தை தொடங்கினார். 2005-லிருந்து இந்த நிறுவனத்தின் பொறுப்புகளற்ற தலைவர் மற்றும் இயக்குநராக இருந்து வருகிறார். திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் பட்டம் பெற்றவர். ரூர்கேலா மண்டல பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டம் மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம் சயின்ஸ் படித்தவர். யுஎஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முதலில் பணிக்குச் சேர்ந்தார். அதற்கு பிறகு அணு மற்றும் அனல் மின்சார உற்பத்தி நிறுவனமான சார்ஜெண்ட் ...

Read More »

செல்போன் சேவையில் உலகின் 3-வது பெரிய நிறுவனம் ஏர்டெல்

உலகின் மிகப் பெரிய செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் சுனில் பார்தி மிட்டல் உருவாக்கியுள்ள ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்துக்கு மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். 20 நாடுகளில் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் முழு வீச்சில் இயங்குகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக செல்லுலர் தகவல் சேவை (டபிள்யூசிஐஎஸ்) அளித்த ...

Read More »

அதிக ஏஜென்சி கமிஷன்: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ‘செபி’ எச்சரிக்கை

மும்பையில் நடந்த சிஐஐ மியூச்சுவல் பண்ட் மாநாட்டில் உரையாற்றும் செபி தலைவர் யூ.கே.சின்ஹா (வலது) மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைவர் லியோ பூரி. தங்களது மியூச்சுவல் பண்ட் (பரஸ்பர நிதி) திட்டங்களை அதிகம் விற்பனை செய்வதற்காக அதிக ஏஜென்சி கமிஷன் அளிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமாகவே ஒரு கட்டுப்பாட்டுக்குள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வர வேண்டும். இல்லையெனில் செபி (பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம்) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி யிருக்கும் என்று அதன் தலைவர் யு.கே. ...

Read More »