Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் (page 107)

வர்த்தகம் செய்திகள்

முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் இந்தியா முன்னிலை: செபி தலைவர் யு.கே. சின்ஹா பேச்சு

முதலீட்டாளர்களின் நலன் களை பாதுகாப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக செபி தலைவர் யு.கே.சின்ஹா குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம் (டிஐஏ) தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவை நேற்று சென்னையில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில் மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் குமார் செளகான் மற்றும் செபி தலைவர் யு.கே. சின்ஹா ஆகி யோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். நிகழ்ச்சியில் உரையாற்றிய சின்ஹா முறையற்ற வழிகளில் பணம் திரட்டும் திட்டங்களுக்கு எதிராக செபி தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ...

Read More »

பேமெண்ட் வங்கிகளால் வங்கிச் சேவையை பயன்படுத்துவது உயரும்

தற்போது அளிக்கப்பட்டிக்கும் பேமெண்ட் வங்கிகளால் மக்களின் வங்கி சார்ந்த பழக்கம் மாறும் என்றும் அதிக மக்களுக்கு முறையான வங்கிச் சேவை கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். பேமெண்ட் வங்கிகள் மொத்த வங்கித்துறையையும் மாற்றும் என்றும் அவர் கூறினார். புதுடெல்லியில் நடந்த இந்தியன் வங்கி விழாவில் இவ்வாறு கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 நிறுவனங்கள்/ தனிநபர்கள் பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது. இந்த வங்கிகள் அடுத்த 18 மாதங்களில் தங்களது ...

Read More »

ஸ்பைஸ் ஜெட் கட்டண சலுகை: ரூ.799க்கு விமான பயணம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.799 க்கு பயணம் செய்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது. ஒரு லட்சம் இருக்கைகளை இந்த சலுகைக் கட்டணத்துக்காக ஒதுக்கியுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் 22 வரை 3 நாட்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை விலையில் ஆகஸ்ட் 26 முதல் 2016 மார்ச் 26 ஆம் தேதிவரை பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளது. மேலும் தங்களது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 10 சதவீத சலுகையையும் பெறலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு வழி பயணக் கட்டணமாக ...

Read More »

கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கு எஸ்பிஐ நிபந்தனை

கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கு புதிதாக கடன் வழங்குவது இனியும் சாத்திய மில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள் ளார். வங்கியின் செயல் திறனை முடக்கும் அளவுக்கு வாராக் கடன் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கு புதிதாக கடன் வழங்குவது வங்கிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அத்தகைய செயல் பாடுகளை இனிமேல் வங்கி மேற்கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்களுக்கு புதிதாக கடன் வழங்கி ...

Read More »

கல்விக் கடன் வழங்க இணையதளம் தொடக்கம்

மத்திய நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. vidyalakshmi.co.in என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங் கிணைத்துக் கொண்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யலட்சுமி எனும் இணையதளம் தொடங்கப்பட்டது. கல்விக் கடனை எதிர்நோக்கியிருக்கும் மாணவர் களின் நலனுக்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட் டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தை உருவாக்கி இதை நிர்வகிக்கும் பணியை ...

Read More »

11 பேமெண்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 11 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 ...

Read More »