Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 688)

தமிழகச் செய்திகள்

தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தலைமறைவான 5 பேரை பிடிக்க தனிப்படை

தொழில் அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தலைமறைவான 5 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இளைஞர் கடத்தல் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர் ரவிசுந்த ரம்(40). இவரது மகன் அபிஷேக் (23). கடந்த 3-ம் தேதி இரவு கோட்டூர் புரம் பாலம் அருகே அபிஷேக்கை சிலர் காரில் கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர். போலீ ஸார் அதிரடியாக களத்தில் இறங்கி அபிஷேக்கை மீட்டு, கடத்தல்காரர் கள் சதாம் உசேன்(27), அகமது ...

Read More »

முதல்முறையாக உயிரோடு இருப்பவரின் கல்லீரல் சிறுமிக்கு பொருத்தம்

கோவையில் முதல்முறையாக உயிரோடு இருப்பவரின் கல்லீர லின் ஒரு பாகத்தை எடுத்து சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பர்கில் பகுதியைச் சேர்ந்தவர் டி.போஜன், விவசாயி. மனைவி ஸ்டெல்லா, அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் ஸ்டெஃபி(17). உதகையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். இந்நிலையில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஸ்டெஃபி, கடந்த மாதம் 13-ம் தேதி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கோமா நிலைக்குச் சென்ற அவரை ...

Read More »

ராயப்பேட்டையில் டெங்கு காய்ச்சலால் 2 வயது குழந்தை பலி

ராயப்பேட்டையில் 2 வயது குழந்தை டெங்கு காய்ச்சலால் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சென்னை ராயப்பேட்டை மஹ்தி உசைன் அலிகான் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களின் 2 வயது மகள் பிரகதிதா, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதனால், குழந்தையை நேற்று முன்தினம் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் ...

Read More »

டிஎஸ்பி விஷ்ணுபிரியா பெற்றோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் பெற் றோரிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரது தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விஷ்ணுபிரியாவின் சொந்த ஊரான கடலூர் அருகே கோண் டூரில் உள்ள அவரது வீட்டில் ...

Read More »

கணவன் மனைவி போல் நடித்து ஜவுளி கடையில் திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி காமராஜர் சாலையில் ஜவுளி கடை நடத்தி வருபவர் விஜயகுமார். இவரது கடைக்கு கணவன், மனைவி போல் 2 பேர் வந்தனர். அவர்கள் ஜவுளி வாங்குவது போல் சுமார் அரை மணி நேரம் சேலைகளை அங்கும், இங்குமாக புரட்டி போட்டுவிட்டு கடைசியில் சேலை பிடிக்கவில்லை என்று கூறி சென்று விட்டனர். இவர்கள் சென்ற பின் சேலைகளை எண்ணிப்பார்த்த போது அதில் விலை உயர்ந்த 4 சேலைகள் காணாமல் போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 12 ஆயிரம் ஆகும். உடனடியாக கடை ...

Read More »

வங்கிகளில் அடகு வைக்க போலி நகைகள் தயாரித்து கொடுத்த பட்டறை அதிபர் கைது

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டு கடன் பெறப்படுவதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி தேனி அன்னஞ்சியை சேர்ந்த முருகேஸ்வரி (வயது 59), லட்சுமிநாராயணன் (60), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் வேறு நபர்களிடம் இருந்து போலி நகைகள் வாங்கி வங்கிகளில் அடகு வைத்து பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலி நகைகள் தயார் செய்யும் கும்பலை போலீசார் தேடி வந்தனர். இவர்களில் ...

Read More »