Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 5)

தமிழகச் செய்திகள்

Southern-Railway-General-Manager-Responding-to-Madurai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்துகொள்ள ஐகோர்ட்டு அனுமதி

மதுரை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500-ஆக உயர்த்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழந்த கிளாஸ்டன், தமிழரசன், கார்த்திக், ரஞ்சித், ஜெயராமன் ஆகியோரது குடும்பத்தினர் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக கிளாஸ்டனின் சகோதரி ஜான்ரோஸ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓராண்டாகியும் அதன் வலியும், வேதனையும் ...

Read More »
AC-burst-causes-fire-three-dead

விழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி

விழுப்புரம், திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜூ. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி கலா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜு( வயது 60), மனைவி கலா (50) , மகன் கவுதம் (25), ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே ...

Read More »
School-student-Keep-sitting-in-her-seat-Encouraged-by-Karur

தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்

கரூர், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் “நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்விக்கு பதில் அளித்த 6-ம் வகுப்பு மாணவி மனோபிரியா, “எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான்” என்று விடை எழுதியிருக்கிறார். விடைத்தாளை திருத்தும்போது, மாணவி அளித்திருந்த அந்த பதில் ஆசிரியரை பெருமிதம் கொள்ள செய்யும் வகையில் இருந்தது. மேலும் ...

Read More »
Came-out-of-the-court-2-volley-cut-the-sickle

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு

கோவை, கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. கோர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சிறையில் அடைப்பு கோவை கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் பிரதீப் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முன்விரோதம் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சந்தோஷ்குமார் ...

Read More »
Chennai-airport-Ru12-lakh-gold-seized

சென்னை விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் தங்கம் பறிமுதல்

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னைக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் வந்த மதுரையை சேர்ந்த வசந்தஜெயராஜ் (வயது 25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் தலைமுடியை உலர வைக்கும் கருவி (ஹேர் டிரையர்) மற்றும் ...

Read More »
Kamal-Haasan-should-cancel-the-party-registration

கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார்

புதுடெல்லி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ...

Read More »