Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 30)

தமிழகச் செய்திகள்

MK-Stalins-letter-to-volunteers

அ.தி.மு.க., பா.ஜ.க.வை தோற்கடிப்பதே தி.மு.க.வின் லட்சியம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தொண்டன் வேறு தலைவன் வேறு என்ற பாகுபாடின்றி தோளோடு தோள் நின்று பயணிக்கும் குடும்பப்பாசமிக்க இயக்கம் தான் தி.மு.க. அப்படித்தான் கருணாநிதி நம்மை ஊட்டி வளர்த்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் முகம் கூட காணாத தொண்டனுக்கும் நான் தலைவன். இது பதவியல்ல, இடையறாது பணியாற்றிடத் தந்திருக்கும் பொறுப்பு. அதனை உணர்ந்து அனைவரையும் இன்முகத்துடன் பாசம் காட்டி அரவணைத்து உங்களுடன் பயணிக்க வேண்டியவன் நான் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டேன். தனிப்பட்ட ...

Read More »
Germany-teacher-married-Dindigul-engineer

திண்டுக்கல் என்ஜினீயரை கரம்பிடித்த ஜெர்மனி ஆசிரியை தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது

திண்டுக்கல், காதலுக்கு கண் இல்லை என்பது போல, எல்லைகளும் இல்லை. தங்கள் மனதுக்கு பிடித்தவரை நாடுகள், கண்டங்களை கடந்து மணமுடிக்கும் இளையோரை ஒவ்வொரு நாட்டிலும் பார்க்க முடியும். இதற்கு திண்டுக்கல் என்ஜினீயர் ஒருவர் சமீபத்திய உதாரணமாகி இருக்கிறார். அங்குள்ள மூக்கன் ஆசாரி சந்துவை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர் ராஜசேகர்-விஜயா தம்பதியின் மகனான நவீன்சேகரன் (வயது 31) என்ற அந்த என்ஜினீயர், ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், டியுப்ளிட்ஸ் பகுதியை சேர்ந்த பென்கார்டு-ஆக்னஸ் ஹெப்ரல் தம்பதியின் மகள் ...

Read More »
Vajpayee-in-Chennai-Fame-Tribute-Meeting-All-party-leaders

சென்னையில் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி கூட்டம் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்று புகழாரம்

சென்னை, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். மறைந்த வாஜ்பாய்க்கான புகழ் அஞ்சலி கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்துக்கு தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக ...

Read More »
Let-teach-the-Modi-government-DMK-Chose-the-leader-MK-Stalin

மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதாவது:- நான் தலைவர் கலைஞர் (கருணாநிதி) இல்லை, அவர் போல் பேசத் தெரியாது, பேசவும் முடியாது. அவரைப் போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று நான் வாழ்ந்ததாக கலைஞர் என்னை பாராட்டி ...

Read More »
Diesel-price-In-the-last-8-months-The-price-of-petrol-was-Rs

டீசல் விலை கடந்த 8 மாதங்களில் லிட்டருக்கு ரூ.10.64 உயர்ந்து உள்ளது.

சென்னை பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் காலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசல் விலை, 62 ரூபாய் 90 காசுகளாக இருந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி 67 ரூபாய் 62 காசுகளாகவும், மார்ச் 1 ஆம் தேதி 65 ரூபாய் 63 காசுகளாகவும் இருந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி 68 ரூபாய் 12 காசுகளாகவும், மே 1 ஆம் தேதி 69 ரூபாய் ...

Read More »
Best-Book-of-the-Year-Award-Poet-Vairamuthu-For-Kallikattu

நாட்டின் சிறந்த புத்தகம் விருது கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’ வழங்கப்படுகிறது

சென்னை, இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார். சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று ...

Read More »