Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 3)

தமிழகச் செய்திகள்

Marina-Beach-included-Travel-Destinations-in-Chennai-Pongal

மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டின 5 லட்சம் மக்கள் திரண்டனர் சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

சென்னை, பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் புதன் கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி ...

Read More »
On-the-102st-birthday-Edappadi-Palinasamy-released

எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயம் 102-வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

சென்னை, தமிழக அரசின் சார்பில், எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடந்தது. அந்தவகையில் சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவருடைய உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யும் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார். அவரை, துணைவேந்தர் சுதா ஷேசய்யன் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். பின்னர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு ...

Read More »
Pongal-only-in-3-days-Tasmac-wine-sale-Exceeding-Rs-500

பொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் ‘டாஸ்மாக்’ மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்வு

சென்னை, பொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை கிடைத்தது. இதனால், இந்த ஆண்டு மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதன்காரணமாக பொங்கல் ...

Read More »
64-feet-idol-reached-Krishnaagiri

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் கோதண்ட ராம சாமி கோயில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயிலில் விஸ்வரூப மகாவிஷ்ணு மற்றும் ஆதிசேஷன் சிலை அமைக்க கோயில் அறக்கட்டளை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிலைக்கான கல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் உள்ளது தெரிய வந்தது. இங்குள்ள குன்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை வெட்டி 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட சாமி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. முழுமையாக ...

Read More »
Jallikkattu-begins-in-alanganallur

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது

மதுரை, தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 533 காளைகள் வந்தன. இவற்றில் 475 காளைகள் போட்டியில் பங்கேற்றன. 150 காளைகள், வீரர்களிடம் பிடிபட்டன. ...

Read More »
Pongal-festival-in-the-governors-palace

கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா : கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது

சென்னை, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கரும்பு, மஞ்சள் குலை, காய்கறி, பழங்கள் போன்றவற்றை சூரிய பகவானுக்கு படையலிட்டு மண் பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக சபாநாயகர் தனபால், அமைச்சர் பாண்டியராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் அனைவரையும் வரவேற்றார். விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது கூறியதாவது:- பொங்கல் விழா தமிழர்களுக்கான விழா. நாடு முழுவதும் இந்த நாள் மகர ...

Read More »