Templates by BIGtheme NET

தமிழகச் செய்திகள்

sleeping-woman-molestation-arrested-youth-in-vadamadurai

வடமதுரை அருகே தூங்கிய பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த சிறுவன் கைது

வடமதுரை: வடமதுரை இ.பி. காலனியைச் சேர்ந்த நடராஜ் மனைவி மீனா (வயது 43). இவர் சம்பவத்தன்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார் இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நைசாக வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது தூங்கிக் கொண்டு இருந்த மீனாவின் ஆடைகளை அகற்றி சில்மி‌ஷம் செய்து கொண்டு இருந்தான். பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாவின் அண்ணன் முருகவேல் சந்தேகமடைந்து உள்ளே வந்து பார்த்த போது சிறுவனின் செய்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவனை சத்தம் ...

Read More »
Investigation-Commissioner-says-about-governor-investigation

கவர்னர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவாரா? – விசாரணை ஆணையர் பேட்டி

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் சந்தானம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- பேராசிரியை மாணவிகளுடன் செல்போனில் பேசிய உரையாடல் தொடர்பான விசாரணையை எப்போது தொடங்குகிறீர்கள்? பதில்:- நாளை(இன்று) காலை மதுரை செல்கிறேன். அங்கு பல்கலைக்கழக அதிகாரிகளை சந்தித்து பேசுகிறேன். ஆவணங்களையும் கொண்டு வர சொல்லி இருக்கிறேன். அதை பார்த்த பிறகு, மாலை 5 மணிக்கு அருப்புக்கோட்டை செல்கிறேன். வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு ...

Read More »
Nirmaladevi-is-taken-into-custody-and-decided-to-investigate

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விருதுநகர், ஏப்.19- விருதுநகர் மாவட் டம் அருப்புக்கோட்டை தேவாங் கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அக்கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் ரீதியான அழைப்பு விடுத்த பிரச்சினையில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட போலீசார் இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்து ...

Read More »
Release-on-the-ticket-website-for-NEET-Exam

மே 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

சென்னை, இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) எழுத வேண்டும். இந்த தேர்வு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடக்கிறது. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு எண், பிறந்த தேதியை கொண்டு இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டில் உள்ள ...

Read More »
The-favorable-solution-to-the-farmers-of-Tamil-Nadu-on-the

காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும் கவர்னர் பேட்டி

சென்னை, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- காவிரி விவகாரத்தில் நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அது என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயம். கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி கவர்னராக பொறுப்பேற்ற பிறகு, 12-ந்தேதி மாநில கவர்னர்களின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு நான் பேசும்போது, ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தேன். டெல்டா பகுதியில் ...

Read More »
Nirmala-Devi-who-was-arrested-in-the-case-to-ensure-that

கைதான நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி கவர்னர் பேட்டி

சென்னை, அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல செல்போனில் உரையாடியபோது, கவர்னரின் பெயரை பயன்படுத்தினார். இதனால், இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றனர். சமூக வலைத்தளங் களிலும் பெண் விவகாரத்தில் கவர்னரின் பெயர் இணைத்து கருத்து பரிமாறப்பட்டு வருகிறது. இதற்கு பதில் கருத்து கொடுக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியை கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.