Templates by BIGtheme NET

தமிழகச் செய்திகள்

After-13-years-Mettur-dam-2-lakh-cubic-feet-of-water

13 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர், கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் உபரிநீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கல் அருகே மலை அடிவாரத்தில் ...

Read More »
62-sanctions-at-a-cost-of-Rs-292-crore-Visit-flood-damage

ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பவானி, காவிரி மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆறுகளின் கரையையொட்டி அமைந்துள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. அந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பவானி தேவபுரம் பகுதியில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார். இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் ...

Read More »
Praise-for-Karunanidhi

சென்னையில் நாளை நடக்கிறது கருணாநிதிக்கு புகழ் வணக்க நிகழ்ச்சி கவிஞர் வைரமுத்து ஏற்பாடு

சென்னை, கவிஞர் வைரமுத்து அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க. தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நிகழ்வுக்கு ‘கலைஞர் புகழ் வணக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கருணாநிதியை தன் தமிழாசான் என்று எப்போதும் சொல்லிவரும் கவிஞர் வைரமுத்து 35 ஆண்டுகளாய்க் கருணாநிதியோடு அரசியல் சாராமல் நெருக்கமாய் இருந்தவர். இருவரும் ஒவ்வோர் அதிகாலையிலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தவர்கள். கருணாநிதி நூல்களை வைரமுத்துவும், ...

Read More »
kauvery1

காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் நேற்று முன்தினம் தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,70,800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் ...

Read More »

மணல் அரிப்பால் விரிசல் கொள்ளிடம் இரும்பு பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம்

திருச்சி, காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் 6-வது தூணில் மணல் அரிப்பால் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த தூண் ஆற்றுக்குள் 2 அடி இறங்கியது. தொடர்ந்து அந்த தூண் மண்ணில் புதைந்து வருவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. காவிரி பாலம் ...

Read More »

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெய்யும். கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.