Templates by BIGtheme NET
Home » தமிழகச் செய்திகள் (page 10)

தமிழகச் செய்திகள்

Talking-to-the-girl-Listen-to-tap-2-people-shotgun-with

பெண்ணிடம் பேசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: 2 பேரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் கைது

நாகை, நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இங்கு குருமகா சன்னிதானமாக உள்ள அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பாதுகாவலராக (பி.எஸ்.ஓ.) ஆயுதப்படை போலீஸ்காரர் ஜெத்தன்ராஜ்(வயது 30) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திருவாவடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை நடத்திவரும் ஒரு பெண்ணின் கடைக்கு சென்று அந்த பெண்ணிடம் கடந்த சில நாட்களாக தகாதமுறையில் பேசிவந்தார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கும் அந்த கடைக்கு சென்ற ஜெத்தன்ராஜ் அந்த பெண்ணிடம் தகாதமுறையில் பேசினார். அதைப்பார்த்த மதியழகன்(46) என்பவர், அந்த பெண்ணிடம் ஜெத்தன்ராஜ் ...

Read More »
Gun-and-bullets-confiscated-Hunted-wild-animals-4-people

துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் வனவிலங்குகளை வேட்டையாடிய 4 பேர் கைது ஓட்டல்களுக்கு இறைச்சி விற்றது அம்பலம்

கோவை, கோவை மாவட்டம் ஆனைமலை அருகே செம்மேடு கிராமத்தில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் செம்மேடு கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 48) வீட்டில் ஒரு கிலோ கடமான் கறி சமைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக பாலகிருஷ்ணன், துரைசாமி (62), சுந்தர்ராஜ் (51), கேரள மாநிலம் நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29) ஆகிய 4 பேரை ...

Read More »
Lottery-chancellor-Martin-Palanisamy

லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் பழனிசாமி உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் – லீமா ரோஸ்

சென்னை, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில் பகுதியில் மார்ட்டினுக்கு சொந்தமான ஓமியோபதி மருத்துவ கல்லூரி, அதன் அருகில் நிர்வாக அலுவலகம் உள்ளது. சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலும் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 70 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டின் வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அப்போது ...

Read More »
I-am-not-the-leader-People-Servant-Kamal-Haasan-talks

‘நான் தலைவன் அல்ல, மக்களின் சேவகன்’ கமல்ஹாசன் பேச்சு

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- சாதி, மதம், பேதம் எங்களுக்கு கிடையாது. எங்களுக்கு அன்பு, பாசம், நேசம் மட்டும்தான் காட்ட தெரியும். நான் ஒரு நடிகன். ஆனால் சிலர் நேர்மையானவர்கள் போல் நடிக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுகிறார்கள். தவறு, திருட்டு செய்தவர்களின் நடிப்பை கண்டு நம்பிவிடாதீர்கள். குடிநீர் ஒரு குடம் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. குடிநீர் வசதி ...

Read More »
Held-with-severe-control-NEET-Exam-the-Need-Wrote-1-lakhs

கடுமையான கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற நீட் தேர்வு தமிழகத்தில் 1¼ லட்சம் பேர் எழுதினர் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து

சென்னை, மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்தியா முழுவதும் 2019-20-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று நடத்தியது. இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 154 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கரூர், தஞ்சை, நெல்லை, நாகர்கோவில், திருச்சி, சேலம், நாமக்கல், கடலூர், வேலூர் ஆகிய 14 நகரங்களில் நடந்தது. சென்னையில் மட்டும் 31 ...

Read More »
Dispute-with-the-boyfriend-Girl-police-Suicide-by-drinking

காதலனுடன் தகராறு பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை 4 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு

திருப்பூர், ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் லட்சுமிநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மனைவி மாபூநிஷா. இவர்களுடைய மகன் சவுகத் அலி, மகள் பர்வீன் பாபி (வயது 23). இவர் 2017-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வானார். பயிற்சி முடிந்ததும் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்தார். அவர் திருப்பூர் முதலிபாளையம் பிரிவு அங்காளபரமேஸ்வரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பர்வீன் பாபி, கடந்த 6 மாதமாக தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே ...

Read More »