Templates by BIGtheme NET

தமிழகச் செய்திகள்

Weather-forecasting-information-for-rainfall

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக மாறி வட தமிழகத்தை தாக்கும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, காற்றின் சுழற்சி காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதால் வட தமிழகத்திற்கு புயல் ஆபத்து நீங்கியது. இந்த நிலையில் கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் தற்போது வளி ...

Read More »
Surveillance-intensity-in-RK-Nagar-constituency

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தொகுதியில் வலம் வந்த 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, பணப்பட்டுவாடா புகாரால் இந்தத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது. எனவே, இந்த முறை சர்ச்சை எதுவும் இல்லாமல் தேர்தலை முறையாக நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ...

Read More »
Swaminathans-Air-Scholar-Award

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது

சென்னை, சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நேற்று டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு எம்.எஸ்.சுவாமி நாதனுக்கு ஏர் அறிஞர் விருதை வழங்கினார். விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:- வேளாண்மை தான் நமது நாட்டின் அடிப்படை கலாசாரம். அரிசி, கோதுமையை ...

Read More »
Fishermen-fight-down-into-the-sea

மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

நாகர்கோவில், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர் கள் ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களை தேடி கண்டு பிடித்து மீட்கும் முயற்சியில் கடற்படை, கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளன. மீனவர்களில் பலர் கரை சேர்ந்து உள்ளனர். பலர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தியும், புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 ...

Read More »
Training-for-Head-Teachers

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை, பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது. முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ...

Read More »
Sheila-Priya-took-over-as-Information-Commissioner

மாநில தலைமை தகவல் ஆணையராக ஷீலாபிரியா பதவி ஏற்றார்

சென்னை, மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியாவுக்கும், 4 தகவல் ஆணையர்களுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார். மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்த கே.ராமானுஜத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநில தலைமை தகவல் ஆணையராக எம்.ஷீலாபிரியா மற்றும் 4 ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. அவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நேற்று மாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ...

Read More »