Home » சினிமா செய்திகள் (page 4)

சினிமா செய்திகள்

படப்பிடிப்பை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் படக்குழு

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ...

Read More »

எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் போலீசில் புகார்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவது இல்லை என்று புகார் கிளம்பி உள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில் ”இரண்டு ...

Read More »

பாரதிராஜாவை நேரில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை ...

Read More »

‘பொன்னியின் செல்வன்-1’: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இப்படம் சுமார் ...

Read More »

நானே வருவேன்னு சொல்லித்தான் வந்தேன், ஏன்னா..” – நடிகர் பார்த்திபன்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பார்த்திபன் கூறியதாவது, “நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்துதான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்த போது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையை செலுத்த ...

Read More »

சூர்யா வெளியிட்ட கார்த்தி பட டீசர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவார் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ...

Read More »