Home » சினிமா செய்திகள் (page 3)

சினிமா செய்திகள்

நான் எப்போமே ரொம்ப பெருமைப்படுவேன் – நடிகர் விக்ரம்

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் ...

Read More »

இது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது – தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த்

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ‘இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குனரின் படம்’ பிரிவில் தயாரிப்பாளருக்கான விருதை 2020-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மண்டேலா’ திரைப்படம் வென்றது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இந்த விருதை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் கூறியதாவது, “இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த ...

Read More »

சவால்களை சந்தித்தாலும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார் – இயக்குனர் பாக்யராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளராக வலம் வரும் நிகில் முருகன் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தில் மோகன், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜீ மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழால் கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, ...

Read More »

வைரலாகும் பிரபாஸின் ஆதிபுருஷ் பட டீசர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு ...

Read More »

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

இயக்குனர் ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கிரீட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும், இதில் வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘பாகுபலி’ படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ...

Read More »

உண்மையில் மறக்க முடியாத தருணம்.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா ...

Read More »