Home » சினிமா செய்திகள் (page 1050)

சினிமா செய்திகள்

நடிகர் ராதாரவி மீது மனித உரிமைகள் கழகம் புகார்

சென்னை எழும்பூரில் செயல்படும் மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான ராதாரவி மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘தனியார் இணையதள தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த ராதாரவி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More »

இது நம்ம ஆளு படபிரச்சினை: நயன்தாராவிடம் நடிகர் சங்கம் விசாரணை

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் “இது நம்ம ஆளு”. பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். இதன் வசனகாட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. நயன்தாரா வேறுபடங்களில் நடிக்கப்போய்விட்டதால், 2 பாடல் காட்சிகள் படமாக்கப்படாமல் உள்ளது. இதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ‘இது நம்ம ஆளு’ படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் அளித்தார். அதில், நயன்தாரா பாடல் காட்சியை முடித்துக்கொடுத்தால்தான் படத்தை வெளியே கொண்டுவரமுடியும். சம்பள பாக்கி முழுவதையும் கொடுக்க தயாராக ...

Read More »

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஆதேஷ் ஸ்ரீவத்சவா 49 வயதில் மரணம்

இந்தித் திரையுலகில் 90-களில் பாடகராக அறிமுகமான ஆதேஷ் ஸ்ரீவத்சவா, தன்னுடைய ஒப்பற்ற இசையறிவால் படிப்படியாக முன்னேறி நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்தார். கடந்த 2010-ம் ஆண்டு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது முதல்முறையாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ‘கீமோதெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளித்து அவர் வெகு விரைவாகவே குணமடைந்தார். கடந்த நாற்பது நாட்களுக்கு முன்னர் மீண்டும் புற்றுநோயின் தீவிரத்தால் பாதிப்படைந்து மும்பையின் அந்தேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இந்த முறை ‘கீமோதெரபி’ சிகிச்சை ஆதேஷுக்கு கைகொடுக்கவில்லை. ...

Read More »

நடிகரை காதலிக்கமாட்டேன்: கங்கனா ரணாவத்

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் நடித்த ‘குயீன்’ என்ற இந்தி படம் வசூலில் சாதனை படைத்தது. இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்துக்குப்பிறகு கங்கனா ரணாவத்தின் மார்க்கெட் அந்தஸ்து உயர்ந்தது. தற்போது ஒரு படத்துக்கு அவர் ரூ.11 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகைகள் யாரும் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More »

புதிய படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தம்

முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்தாலும் முன்பு இருந்த அதே துறுதுறு நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இப்படத்தின் வெற்றியையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய ஜோதிகா, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ...

Read More »

ஜீவா, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு “போக்கிரி ராஜா” பெயர் சூட்ட ரஜினிகாந்த் அனுமதி

சென்னை, ஜீவா, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதியபடத்துக்கு “போக்கிரி ராஜா” என்ற தனது படத்தின் பெயரை வைத்துக்கொள்ள ரஜினிகாந்த் அனுமதி அளித்துள்ளார். ரஜினி பட பெயர்கள் ரஜினிகாந்தின் பழைய படபெயர்களை தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்ள கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா’ படபெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது. ‘பில்லா-2’ படத்திலும் அவர் நடித்தார். இதுபோல், ரஜினியின் ‘மாப்பிள்ளை’ படத்தலைப்பு தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டது. ‘நான் மகான் அல்ல’ என்ற பெயரை கார்த்தி தனது படத்துக்கு பயன்படுத்தினார். ‘முரட்டுக்காளை’ தலைப்பு சுந்தர். சி படத்தில் ...

Read More »