Home » சினிமா செய்திகள் (page 1034)

சினிமா செய்திகள்

அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்?

தனுஷ் தற்போது பிரபு சாலமன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு, துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகவிருக்கும் இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அண்ணன், தம்பியாக நடிக்கும் தனுஷ், இதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாத லோக்கல் ரவுடியாகவும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார். அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனை அணுகியுள்ளனர். ஆனால், ...

Read More »

பவன் கல்யாணுடன் முதல்முறையாக ஜோடி சேரும் ராய் லட்சுமி

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘கப்பார் சிங்’ படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘சர்தார் கப்பார் சிங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பவன்கல்யாணுக்கு ஜோடியாக அனிஷா அம்ரோஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சுதந்திர தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் ராய் லட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் பவன் ...

Read More »

கேரளாவில் நடந்தது நடிகை பானு காதல் திருமணம் இசைக்கலைஞரை மணந்தார்

கொச்சி நடிகை பானு கேரளாவை சேர்ந்த இசைக்கலைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று நடந்தது. பானு ‘தாமிரபரணி’, ‘அழகர் மலை’, ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்களில் நடித்தவர், பானு. இவருக்கும், கேரளாவை சேர்ந்த இசைக்கலைஞர் ரிங்கு டோமி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் சில வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலுக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ...

Read More »

6 கேமராக்களில் 13 நாட்கள் எடுக்கப்பட்ட ஆர்.கே.- செல்வமணி க்ளைமாக்ஸ் ​சண்டை காட்சி

மக்கள் பாசறை தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. ஆர்.கே.நாயகனாக நடிக்க, ஷாஜி கைலாஸ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என்வழி தனி வழி’ படங்களுக்குப் பின் ஆர்.கே. – ஷாஜி கைலாஸ் இணையும் மூன்றாவது படம் இது.​ நீதுசந்திரா பிரதான நாயகியாக நடிக்கிறார். இனியா,​ கோமல் சர்மா​, சுஜா வாருணி​ ​ஆகியோரும் நடிக்கிறார்கள் நடிப்பில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதையும் செய்யத் துணிந்தவரான ஆர்கே இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் ​பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். நம்மூர் சண்டை​ப் பயிற்சி​ போதாது ...

Read More »

புலி தெலுங்கு ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. விஜய் படங்களுக்கு தெலுங்கு உலகிலும் மவுசு இருப்பதால், இப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்கள். அதன்படி, வருகிற அக்டோபர் 1-ந் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ் பதிப்பின் ஆடியோ வெளியீடு நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது தெலுங்கிலும் இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 6-ந் தேதி ஐதராபாத்தில் ...

Read More »

தென்கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் பாகுபலி

இந்தியா மற்றும் உலக அரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’, ஆசியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களையும், புதிய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை திரையிட்டு வரும் ‘பூசன்’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டுமல்லாது, மக்கள் மனதுக்கு பிடித்த, புதிய இயக்குனரின் படைப்புகளும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வருகிறது. ‘பாகுபலி’ படத்தின் சர்வதேச பதிப்பை புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான ‘டேக்கன் 2’, ‘டிரான்ஸ்போட்டர் 2’, ‘இன்கிரிடிபிள் ஹல்க்’ போன்ற படங்களில் பணிபுரிந்த வின்சென்ட் ...

Read More »