Home » சினிமா செய்திகள் (page 1030)

சினிமா செய்திகள்

என் வாழ்க்கையை படமாக எடுத்தால் ஓடாது: அமிதாப்பச்சன்

பாலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சமீபத்தில் தனது 75–வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பேசியவர்கள் அமிதாப்பச்சனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். இதற்கு பதில் அளித்து அமிதாப்பச்சன் பேசினார்…. “எனது வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறுகிறார்கள். அதை நான் ஏற்க மாட்டேன். என்னிடம் பல குறைகள் இருக்கின்றன. என் நடிப்பிலும் குறை இருக்கிறது. என்னிடம் உள்ள குறைகளை எப்படி சரிசெய்யலாம் என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று பாராட்டுகிறார்கள். ஆனால் என்னைவிட திறமையானவர்கள் இருக்கிறார்கள். ...

Read More »

அஜித் பற்றி தவறாக பேசினேனா? உதயநிதி விளக்கம்

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பிரபல நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டுக்கு, அஜித் ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, கடுப்பான உதயநிதி, அவரிடம் அஜித்தை பற்றி தவறான வார்த்தைகளால் திட்டியதாக ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியானது. இதுபற்றி அறிந்ததும் அஜித் ரசிகர்கள் வழக்கம்போல், தங்களது நடிகரை வசைபாடிய உதயநிதியை பதிலுக்கு வசை பாட தொடங்கினர். இதுகுறித்து, அறிந்ததும் ...

Read More »

வேதாளம் தரலோக்கல் பாடல் டீசர் விரைவில்

சென்னை: வேதாளம் படத்தின் பாடல்கள் வரும் 16ம் தேதியன்று வெளியாகிறது.இந்நிலையில் அதற்கு முன்னதாக படத்தில் இடம்பெறும் தர லோக்கலான பாடலின் டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்,ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கும் படம் வேதாளம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வேதாளத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர், இணையத்தில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. ...

Read More »

நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டோம்: விஷால்

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உருவபட திறப்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்றிரவு நடந்தது. விழாவில் பழம்பெரும் நடிகைகள் விஜயகுமாரி, ஷீலா, சச்சு ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் மற்றும் அவரது அணியை சேர்ந்த பொன்வண்ணன், குட்டி பத்மினி, சங்கீதா, பூச்சி முருகன், எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன்கள் இளங்கோவன், கலைவாணன், ராஜேந்திரகுமார், செல்வராஜ், ரவிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உருவபடத்தை ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் திறந்து வைத்தார். விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது:- மூத்த நடிகைகள் விஜயகுமாரி, ஷீலா போன்றோரை ...

Read More »

எந்திரன் 2வில் இவர்தான் சூப்பர் ஸ்டாரின் ஜோடியா?

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் பிரம்மாண்டத்தில் உச்சமாக இருந்தது. இப்போது எந்திரன் 2 தயாராக இருக்கிறது. இப்படத்தை பற்றி பேச ஆரம்பித்ததில் இருந்தே மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு தொடங்கிவிட்டது. ரஜினி அடுத்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராகடி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங்ஆண்டனி ஆகியோர் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளனர். அதோடு சமீபத்தில் கூட வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்அர்னால்டிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More »

ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை குவிக்கும் ருத்ரமாதேவி

அனுஷ்கா மகாராணியாக நடித்துள்ள வரலாற்றுப் படமான ‘ருத்மாதேவி’ கடந்த 9–ந்தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆனது. தெலுங்கானா, ஆந்திரா பகுதியை ஆண்ட வீரமங்கையின் படம் என்பதால், அந்த மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதில் நடிப்பதற்காக அனுஷ்கா வாள் பயிற்சி, குதிரை, யானை சவாரி பயிற்சி எடுத்தார். 2½ ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்ததாக கூறி இருந்தார். இப்போது தெலுங்கு மற்றும் ஒருசில மாநிலங்களில் வெளியாகி இருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைப்படி, பெண் குழந்தையாக பிறகும் ...

Read More »