Home » சினிமா செய்திகள் (page 1010)

சினிமா செய்திகள்

பிறந்தநாளையொட்டி போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார் நயன்தாரா

நடிகை நயன்தாரா, கேரளாவை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டில் நவம்பர் மாதம் 18-ந் தேதி பிறந்தார். அவருடைய சொந்த பெயர், டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக, நயன்தாரா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மலையாள படங்களில் நடித்து வந்த அவர், 2005-ம் வருடம் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, ஹரி டைரக்டு செய்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில், அவர் நடித்து வருகிறார். அவரை ரசிகர்கள், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ...

Read More »

வேதாளம் வசூல் 8 நாட்களில் ரூ.100 கோடி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் வசூலிலும் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் எட்டாத சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இப்படம், முதல் நாள் 15.3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும் வசூல் பெரியளவில் குறையவில்லை. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ...

Read More »

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களை தொடர்ந்து சூர்யா, நடிக்க இருந்த படம் ‘துருவ நட்சத்திரம்.’ இப்படத்தின் பூஜைக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதில் இருந்து சூர்யா விலகி விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த படம் அப்படியே நின்றது. ‘தனி ஒருவன்’ படத்துக்கு பிறகு ஜெயம்ரவிக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. அவரை வைத்து படம் எடுக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் ஆர்வம் ...

Read More »

முழு காமெடி கதையில் கலக்க போகும் கமல்

தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம், முழுக்க காமெடி பின்னணியில் உருவாக இருக்கிறது. ‘தூங்காவனம்’ படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படத்துக்கான செய்திகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இச்செய்திகள் அனைத்துக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார் கமல். அமலா, ஷரினா வகாப் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவிருக்கும் அப்படத்தை இயக்க இருக்கிறார் ராஜீவ் குமார். இன்னொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார், அதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ...

Read More »

பாகுபலி 2 விற்காக அடித்துக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி 2 விநியோக உரிமையைக் கைப்பற்றிட ஐரோப்பிய விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 10 ம்தேதி வெளியான பாகுபலி திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. மேலும் இந்தியளவில் அதிக வசூல் செய்த 3 வது திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி தக்கவைத்துக் கொண்டது. படம் வெளியாகி 5 மாதங்கள் தாண்டிய நிலையில் தற்போது பாகுபலி 2வின் ஐரோப்பிய விநியோக உரிமையைக் கைப்பற்றிட அங்குள்ள விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. ஐரோப்பியத் தயாரிப்பாளரும், ...

Read More »

காக்கா முட்டை பட இயக்குநர் காலை தொட்டு கும்பிடுவேன்: பிரபல மலையாள நடிகர் நெகிழ்ச்சி

சென்னை: காக்கா முட்டை இயக்குனரின் காலைத் தொட்டு கும்பிடுவேன் என்று மலையாள காமெடி நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் தெரிவித்திருக்கிறார். மலையாளத்தில் பிரபல காமெடி நடிகரான ஹரிஸ்ரீ அசோகன் தமிழில் அஞ்சேல் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். இதில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது “காமெடியன் என்றால் காமெடி மட்டும்தான் வரும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒரு நடிகன் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வேண்டும். தமிழ் படத்தில் நடிப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காக்கா முட்டை படத்தை பார்த்து மிகவும் ...

Read More »