Home » சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

நடனத்தில் கலக்கும் இசையமைப்பாளர் இமான்.. வைரலாகும் வீடியோ..

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் ‘வள்ளி மயில்’, ‘மலை’ போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். ஒரு நிமிடம் ...

Read More »

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த அவதார் 2.. எகிறும் எதிர்பார்ப்பு..

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ...

Read More »

காமெடி பாணியில் நடனம்.. கவனம் ஈர்க்கும் வடிவேலு வீடியோ..

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் பிரபல ரீல்ஸ் பாடலான ‘கச்சா பாதாம்’ என்ற பாடலுக்கு தனக்கே ...

Read More »

வெற்றிமாறனின் ‘விடுதலை’ கதை போன்று என் படமா? விளக்கம் அளித்த இயக்குனர்

விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். ரத்த சாட்சி என்ற படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி, வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வந்தனர். இரண்டு படங்களுமே நக்சலைட்களுக்கும், போலீசுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசும் படமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ...

Read More »

கேஜிஃப் பிரபலம் மரணம்.. வருத்தத்தில் திரையுலகம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் கேஜிஃப். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பார்வையற்ற வயதானவர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கிருஷ்ணா ஜி ராவ். கன்னட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள அனைவராலும் அறியப்பட்டார். நீண்ட வருடங்களாக திரைத்துறையில் துணை நடிகராக வலம் வரும் கிருஷ்ணா ஜி ராவ், சமீபத்தில் தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளியான ‘நானோ நாராயணப்பா’ என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் ...

Read More »

என்னுடைய 50 வது படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி.. நடிகர் பரத்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பால தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழு, திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் பரத் பேசியதாவது, இந்தப்படத்தின் கதை முழுக்க ஒரு அபார்ட்மெண்டில் நடப்பது, அதற்கேற்ற பரபரப்பான திரைக்கதை இருக்கிறது. திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது. இந்தப் படக்குழு என் குடும்ப நண்பர்கள் ...

Read More »