Templates by BIGtheme NET
Home » சற்று முன்

சற்று முன்

Tamil-youth-seeking-help-from-Malaysia

வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்ட இளைஞர், மலேசியாவிலிருந்து உதவி கோரும் தமிழக இளைஞர்

சென்னை, மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு, கடந்த ஒராண்டுக்கு முன்பு முகவர் மூலம் மலோசியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள முகவர் அந்த நாட்டு பணம் 6000 வெள்ளி மற்றும் பாஸ்போர்ட்டினை பெற்று கொண்டு தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட தினேஷ்பாபு உணவு, தங்க இடம், வேலையின்றி பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். நிற்கதியான தனது நிலையை, பிறரின் உதவியுடன் செல்போனில் பதிவு செய்த அந்த இளைஞர், தம்மை மீட்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என கலங்கிய கண்களுடன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ ...

Read More »
passenger-are-Damage-in-mid-air-The-pilot-should-register

நடுவானில் பயணிகள் பாதிப்பு: விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்

புதுடெல்லி, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்டது. இதில் 166 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே எழும்பிய போது, அதனுள்ளே காற்றழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொத்தானை இயக்க விமானி மறந்ததால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 30 பயணிகளுக்கு மூக்கு, காதுகளில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனால் நடுவானில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி ...

Read More »
Doctors-who-have-an-MRI-scan-for-the-injured-snake

காயம் அடைந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்த டாக்டர்கள்

மும்பை, வி‌ஷப்பாம்பு ஒன்று உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் அங்கு நெளிந்து கொண்டு இருந்தது. இதை பார்த்ததும் போலீஸ்காரர் அந்த பாம்பை மீட்டு பாம்பு பிடிக்கும் அனில் குபால் என்பவரிடம் ஒப்படைத்தார். அவர் செம்பூரை சேர்ந்த கால்நடை டாக்டர்களிடம் சிகிச்சைக்காக அந்த பாம்பை கொண்டு வந்தார். பரிசோதனையில் அந்த பாம்பின் முதுகெலும்பு உடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முதுகெலும்பு எந்த அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது என்பதை கண்டறிய அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த பாம்புக்கு ...

Read More »
Petrol-price-hike-in-Chennai

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஜூலை 30-ந் தேதி முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் ...

Read More »
Minimum-charge-Sticker-padded-up-to-Rs-More-in-Chennai-300

குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்

சென்னை, தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுமார் 20 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரித்தது. இந்த பஸ் கட்டண உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கினர். சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் ...

Read More »
MGR-at-Nagercoil-today-Century-Festival-Edappadi

நாகர்கோவிலில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு

நாகர்கோவில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைப்பதோடு, ரூ.13.07 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.31 கோடியே 34 லட்சம் மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலம் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். தொடர்ந்து 14 ஆயிரத்து ...

Read More »