Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 982)

குமரி செய்திகள்

குழிவிளையில் விழிப்புணர்வு பேரணி

ஹைனோ டெவில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி குழிவிளையில் நடந்தது. இதற்கு பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். விளாத்துறை தலைவர் சுரேஷ் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கமல செல்வராஜ் கலந்து கொண்டார். பேரணி குழிவிளையில் இருந்து தொடங்கி காப்புக்காடு வரை நடந்தது. இதில் எழுத்தாளர் பால் ராசையா மார்ட்டின் ரெய்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

கோவில்களில் சாமி சிலையை திருடியவர் கைது

திருவனந்தபுரம் மாவட்டம் பெருங்கடைவிளை அருகே உள்ள மணலுவிளை பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 55). இவர் கேரளாவில் உள்ள பல கோவில்களில் சாமி சிலையை திருடி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது விளப்பின்சாலை, மாரநல்லூர், மலையின்கீழ், நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, காட்டாக்கடை ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், மணியனை மலையின்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் மணியனை காட்டாக்கடை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி மணியன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More »

“மனித நேய மாண்பாளர் அப்துல்கலாம்’’ குமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் இரங்கல்

“மனித நேய மாண்பாளர் அப்துல் கலாம்’’ என்று குமரி சி.எஸ்.ஐ. பேராயர் தேவகடாட்சம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். சி.எஸ்.ஐ. முன்னாள் பிரதம பேராயரும், குமரி சி.எஸ்.ஐ. பேராயருமான ஜி.தேவகடாட்சம், பேராய நிர்வாக செயலாளர் டாக்டர் ஏ.ஜே.பென்சாம், நிதி மேலாண்மையாளர் வக்கீல் சி.ராபர்ட் புரூஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒருங்கிணைந்து… ஏழை படகோட்டியின் மகனாக பிறந்து, செய்தித்தாள் விற்கும் சிறுவனாக வாழ்வை தொடங்கி, விஞ்ஞானியாக வாழ்விலே உயர்ந்து, 2002 முதல் 2007–ம் ஆண்டு வரை இந்தியாவின் 11–வது ஜனாதிபதியாக பதவி ...

Read More »

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அப்துல்கலாம் உருவப்படத்துக்கு அஞ்சலி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் நடந்தது. இரங்கல் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, அப்துல் கலாம் உருவப்படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் இரங்கல் தெரிவித்து பேசும்போது கூறியதாவது:– இந்தியாவில் எந்த ஒரு பகுதிக்குச் சென்றாலும் அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ...

Read More »

விடைபெற்றார் மக்கள் ஜனாதிபதி; அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

ராமேசுவரம், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட்கிழமை மாலை மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று காலை மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அப்துல் கலாமின் உடல் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடற்படைக்கு ...

Read More »

ராஜாக்கமங்கலம் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ராஜாக்கமங்கலம் ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு வள்ளியாவிளையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சஜீத், மாணவரணி செயலாளர் கோபால், ஊராட்சி செயலாளர் பாபு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், அடுத்த மாதம் 25–ந் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் ...

Read More »