Templates by BIGtheme NET

குமரி செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி, மே. 9– கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடலில் சூறைக்காற்று வீசியது. அதோடு கடலின் நீர் மட்டத்திலும் மாற்றம் காணப்பட்டது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடந்து கொண்டிருந்தது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பகல் 10.30 மணிக்கு கடலில் மீண்டும் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி விவேகானந்தர் பாறைக்கு நடந்து வந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே பாறைக்கு அழைத்துச் ...

Read More »

வடிவீஸ்வரம் தெப்பக்குளத்தில் மூழ்கிய மாணவர் பிணமாக மீட்பு

நாகர்கோவில், மே. 9– நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிரீசன் (வயது 21). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் கிரீசன் அழகம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் அழகம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு வந்து தேடினார்கள். அப்போது அவரின் ஆடைகளும், செருப்பும் குளத்தின் படிக்கட்டில் இருந்தது. கிரீசனை காணவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று ...

Read More »

வடசேரியில் தாயை கொன்ற மகன்: மனநலம் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

நாகர்கோவில், மே. 9– நாகர்கோவில் வடசேரி ஓணக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாணுமாலயன். இவர் இந்தியன் ஆயில் கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 64). இவர்களுக்கு 3 மகள்களும், ராஜா (32) என்ற மகனும் உள்ளனர். ராஜா ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் சென்னையில் இருந்தபோது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜாவுக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ...

Read More »

குமரியில் மீண்டும் இடி மின்னலுடன் மழை

நாகர்கோவில், மே. 9– குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. கடந்த 2 வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்த நிலையில் நேற்று மாலை பூதப்பாண்டி, சுருளோடு, மயிலாடி, அடையாமடை, ஆரல்வாய் மொழி, தோவாளை பகுதிகளில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. ...

Read More »

நாகர்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி: வாட்ஸ்-அப்பில் பரவியதால் அதிகாரிகள் அதிர்ச்சி

நாகர்கோவில், மே. 9– அரசு வேலை, ஒப்பந்தப் பணி போன்றவற்றில் ஈடுபடுவோர் லஞ்சம் கேட்டால் அவர்களை கையும் களவுமாக பிடிக்கும் பணிக்கென லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளனர். ஆனால் இப்போது அந்த வேலையை நவீன காமிராக்களும், செல்போன் உபகரணங்களும் செய்து விடுகின்றன. லஞ்சம் கொடுப்போரே அதனை ரகசியமாக படம் பிடித்து மீடியாக்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இவை உரையாடலாகவும், வீடியோ காட்சிகளாகவும் வெளிவந்து லஞ்சம் வாங்கியோரை அடையாளம் காட்டி விடுகிறது. அந்த வகையில், தேனி மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ஒப்பந்தத்தாரரிடம் பணம் கேட்டு நச்சரிக்கும் ...

Read More »

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். துறைமுக பணி தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுக பணி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக அலைதடுப்பு சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. தற்போது, மீன்பிடி துறைமுகத்தில் இரண்டாம் கட்டப்பணிக்கும், ராமன்துறை, முள்ளூர்துறை, அரையன்தோப்பு பகுதிகளில் தூண்டில் வளைவு அமைப்பதற்கும் மத்திய- மாநில அரசுகளால் ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டு அரசு ஆணை வழங்கியுள்ளது. அதன்அடிப்படையில் மீன்பிடி துறைமுகத்தில் இரண்டாம் கட்ட பணியாக ரூ.60 மீட்டர் நீளத்தில் புதிய அலைத்தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. ...

Read More »

apteka mujchine for man ukonkemerovo woditely driver.