Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 5)

குமரி செய்திகள்

_Prime-Minister-Narendra-Modi-darshan-in-Thiruvanthanapuram

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் ஸ்வதேசி தர்சன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திருவனந்தபுரம் வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மாலை 5 மணிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், கவர்னர் பி.சதாசிவம் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் சென்ற அவர், ஆசிராமம் மைதானத்தில் நடைபெற்ற 13 கி.மீ நீளமுள்ள கொல்லம் புறவழிச்சாலையினை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் நரேந்திர பிரதமர் மோடி பேசியதாவது;– மத்திய சுற்றுலா துறை சார்பில் ஸ்வதேசி தர்சன் திட்டத்தின் கீழ் கோரளாவில் கோவில்கள், ...

Read More »
Sea-fury-in-Kanyakumari--Canceling-boat-traffic-to

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள். அதை தொடர்ந்து கடலின் நடுவே உள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து செல்வது வழக்கம். தற்போது ...

Read More »
Students-should-build-selfconfidence--Pon

“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” – ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

நாகர்கோவில், குமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர்-ஆசிரியைகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் கல்வியை மட்டும் கற்பிக்க கூடாது. தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் கிடைக்க கூடிய வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று மாணவர்கள் நினைக்காதீர்கள். சுயமாக தொழில் செய்து வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலை கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும்” என்றார். ...

Read More »
Sakhaj-Operation-in-Kanyakumari-Sea-area-to-prevent-the

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ ஆபரேஷன்

கன்னியாகுமரி, கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கடல் வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ‘சவுகாஜ்’ ஆபரேஷன் தொடங்கியது. இதில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், இந்திய கடலோர காவல் படை போலீசாரும் ஈடுபட்டனர் இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் அதிநவீன ரோந்து வாகனத்தில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்றது. இந்த சோதனை வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 4 ...

Read More »
Kanyakumari-Tirupathi-Venkatasalapathy-Temple-Kumbabhisheka

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது

கன்னியாகுமரி, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெங்கடாசலபதி கோவிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, வட இந்தியா மற்றும் தென் இந்தியாவில் கோவில்களை கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் தென்கோடி கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுடன் மடப்பள்ளி, கல்யாண மண்டபம், அர்ச்சகர்கள் தங்கும் குடியிருப்பு, சகஸ்ர தீப அலங்கார மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாதம் நிறைவு பெற்று வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி கும்பாபிஷேக ...

Read More »
Sea-outrage-in-Pallam-Damage-to-boats

பள்ளத்தில் கடல் சீற்றம்; படகுகள் சேதம்

மேலகிருஷ்ணன்புதூர், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடற்கரை கிராமங்கள் உள்ளன. நாகர்கோவில் அருகே உள்ள பள்ளத்தில் நேற்று அதிகாலை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடலில் ராட்சத அலைகள் எழும்பி கரையில் பயங்கரமாக மோதியது. மேலும் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது, கிராம மக்களுக்கு முதலில் தெரியவில்லை. அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளம் ஆலயத்தில் மணி ஒலிக்கப்பட்டு கடல் சீற்றம் பற்றி மக்களுக்கு ...

Read More »