Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 4)

குமரி செய்திகள்

Eraniel-Railway

இரணியல் ரயில் நிலையத்தில் 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இரணியல் ரயில் நிலையத்தில் கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இரணியல் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை வட்டாட்சியர் அப்துல் மன்னான் தலைமையில் துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இரணியல் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்தில் சிறு, சிறு மூட்டைகளில் 1.25 டன் ரேஷன் அரிசி பதுக்கி ...

Read More »
The-summer-heat-wave-in-Kumari-mining-water-level-minus-19

குமரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக குறைந்தது

நாகர்கோவில், பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. இந்த அணை முழுக்க, முழுக்க குடிநீருக்காக கட்டப்பட்டதாகும். நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை இந்த அணை தான் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் வழியோர கிராம மக்களும், சுசீந்திரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த அணையால் பயன்பெற்று வருகிறார்கள். இந்த அணையின் நீர் கொள்ளளவு 25 அடியாகும். இந்த அணை முழுமையாக வறண்டாலும் 25 அடிக்கு கீழே மைனஸ் அளவில் 20 அடி வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியும் என்பது இந்த ...

Read More »
Modern-therapy-state-hospital-doctors-achievement-by-lifting

புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எலும்புகளை அகற்றி நவீன சிகிச்சை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

நாகர்கோவில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் வேதி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவுகள் மூலம் கடந்த 6 மாதங்களாக புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சைகளும், அதற்குப்பின் தேவைப்படும் கீமோதெரப்பி சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதுவரை 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையும், 294 நோயாளிகளுக்கு கீமோதெரப்பி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று முறை பல்வேறு இடங்களில் அறுவை சிகிச்சை செய்தவர் தாழக்குடியைச் சேர்ந்த ஜெயந்தி (வயது ...

Read More »
Two-persons-arrested-for-stolen-temples-near-Karungal

கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது

கருங்கல், குளச்சல் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதைதொடர்ந்து அவர்களை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்களுக்கு கருங்கல் போலீஸ்நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. பின்னர், 2 பேரையும் தனிப்படையினர் கருங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கருங்கல் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஒருவர் பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியை சேர்ந்த நாராயணன் என்ற ...

Read More »
Motherdaughter-killed-in-accident-Will-Nagercoil-block-off

விபத்தில் தாய்-மகள் பலி: நாகர்கோவில் கேப் ரோட்டில் வாகனங்களை நிறுத்த தடை வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில், நாகர்கோவிலை அடுத்த மேலசங்கரன்குழி சாந்தபுரத்தை சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (வயது 49). ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக உள்ளார். நாககிருஷ்ணமணி தன்னுடைய மகள் ஸ்ரீபத்மபிரியாவை, பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக தனது மனைவி சுதாவுடன் நாகர்கோவில் வந்தார். பள்ளியில் சேர்க்கையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டுக்கு சென்றனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் சென்ற போது சாலையோரம் நிறுத்தி இருந்த காரின் கதவை டிரைவர் திடீரென திறந்தார். அந்த கதவில் நாககிருஷ்ணமணி மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சாலையில் தூக்கி ...

Read More »
In-the-midnight-of-Monday-evening-the-camera-was-detected

திங்கள்சந்தை பகுதியில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமரா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் திறந்து வைத்தார்

அழகியமண்டபம், இரணியல் போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட திங்கள்சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு, வழிபறி போன்றவை நடந்து வருகிறது. இதை தடுக்க முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைந்து நன்கொடை வசூல் செய்து ரூ.15 லட்சம் செலவில் 19 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தனர். குறிப்பாக திங்கள்சந்தை சந்திப்பு, இரணியல், பேயன்குழி, சுங்கான்கடை போன்ற முக்கிய பகுதிகளில் கேமரா அமைப்பட்டுள்ளது. இவற்றின் கட்டுப்பாட்டு அறை ...

Read More »