Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 30)

குமரி செய்திகள்

Village-administration-officials-in-Kumari-district-take-3

குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

நாகர்கோவில், பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மக்களைத்தேடி என்ற போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வினியோகம் செய்யும் ...

Read More »
Salem-with-college-student-at-Takalai-bus-station-Detained

தக்கலை பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மி‌ஷம்; போதை வாலிபர் கைது

பத்மநாபபுரம், தக்கலை பஸ்நிலையத்துக்கு எதிரே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குடிமகன்கள் மதுவை குடித்து விட்டு பஸ்நிலையத்துக்குள் நுழைந்து அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பள்ளி– கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி, குமாரகோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது தாயாருடன் தக்கலை பஸ்நிலையத்துக்கு வந்தார். அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, மதுக்கடையில் இருந்து போதையில் வெளியே வந்த ...

Read More »
Students-at-the-school-concert-near-Kalikavilai-break-the

களியக்காவிளை அருகே பள்ளி கலைநிகழ்ச்சியில் மாணவர்கள்– போலீஸ் மோதல் ஏட்டு மண்டை உடைப்பு

களியக்காவிளை, களியக்காவிளை அருகே உள்ள பளுகல் கூனம்பனை பகுதியில் கேரள எல்லையையொட்டி ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 75–வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 2–ந்தேதி முதல் தினமும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மைதானம் தமிழக எல்லைக்குள் வருவதால் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பளுகல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நித்திரவிளையை சேர்ந்த கணேஷ்குமார்(வயது 40) தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளியில் ...

Read More »
The-school-student-petitioned-to-the-victims-resident

கருணை இல்லத்தில் உள்ள தாயாரை மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் பள்ளி மாணவி மனு

நாகர்கோவில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மாணவி மனு திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்த சிவகுமார் (வயது 35). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மகள் ஐஸ்வரியா (வயது 10). பள்ளி மாணவியான இவர் நேற்று தனது ...

Read More »
Jayalalitha-in-Kanyakumari-to-Maniyandam-Agastheeswaram

கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சுசீந்திரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தம்பி தங்கம் வரவேற்று பேசினார். துணை செயலாளர் முத்துசாமி, இணை செயலாளர்கள் ஏசுத்தங்கம், பாக்கியா பாய், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “குமரி மாவட்டதை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை ...

Read More »
Theft-of-the-15-pound-jewels-bought-for-the-daughters

கருங்கல் அருகே மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 15 பவுன் நகைகள் திருட்டு

கருங்கல், கருங்கல் அருகே குற்றிப்பாறவிளை பகுதியை சேர்ந்தவர் ரசலையன் (வயது 60). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகளுக்கு வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ரசலையன் சொந்த ஊருக்கு வந்து மகளின் திருமண ஏற்பாடுகளை செய்தார். மகளின் திருமணத்துக்காக 15 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ரசலையன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஆலயத்துக்கு சென்று விட்டார். ...

Read More »