Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 3)

குமரி செய்திகள்

4-persons-including-retired-professor-in-Nagercoil-have

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற பேராசிரியை உள்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நாகர்கோவில், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சிறுவர்-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்கள் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோடு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், மற்றொருவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர். இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு ...

Read More »
Collector-name-information-to-add-remove-edit-for-voter

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் ஆணையரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான அதுல் ஆனந்த், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் (வளர்ச்சி), உதவி கலெக்டர்கள் ராஜகோபால் சுங்கரா (பத்மநாபபுரம்), பவன்குமார் கிரியபனவர், பிரதிக் தயாள் (பயிற்சி) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து ...

Read More »
Siththa-Medical-College-student-students-suddenly-fight-near

புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்

புதுக்கடை, புதுக்கடை அருகே முன்சிறையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி உள்ளது. இதில் 108 மாணவ–மாணவிகள் பயின்று வருகிறார்கள். கடந்த 2015–ம் ஆண்டு அரசு அனுமதித்த மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 மாணவ–மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சேர்த்ததாக தெரிகிறது. கூடுதலாக சேர்க்கப்பட்டவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட 20 மாணவர்கள் உள்பட 59 மாணவ–மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதையறிந்த மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று ...

Read More »
The-Congressional-Secretary-has-the-same-objective-of-making

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே ஒரே குறிக்கோள் காங்கிரஸ் செயலாளர் பேச்சு

கருங்கல், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட்டம் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், தமிழக காங்கிரஸ் செயலாளர் அருள் பெத்தையா, கேரள மாநில காங்கிரஸ் செயலாளர் வல்சலம், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- ...

Read More »
The-Tribunal-meeting-should-be-held-in-Thoothukur-Panchayat

தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் பொதுமக்கள் மனு

நாகர்கோவில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 315 மனுக்கள் கொடுத்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், ...

Read More »
Marriage-near-the-Boothapandi-is-committed-to-committing

பூதப்பாண்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

பூதப்பாண்டி, பூதப்பாண்டி அருகே உள்ள எட்டாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகிற 31–ந் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்தநிலையில், ராமகிருஷ்ணன் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் தனது தந்தை ஜோசப்பிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். அதன்பின்பு இருவரும் தனித்தனி அறைகளில் தூங்க சென்றனர். நேற்று ...

Read More »