Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 20)

குமரி செய்திகள்

The-caravan-victim-kills-victims-near-the-plant

கருங்கல் அருகே பரிதாபம் வாகனம் மோதி பாதிரியார் பலி

கருங்கல், கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பொட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் பென்னட் ஜோசப்ராஜ் (வயது 39). இவர் திரிபுராவில் பாதிரியராக பணியாற்றி வந்தார். தற்போது, கருங்கல் கண்டன்விளையில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை பணிக்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர், தெருவுக்கடை பகுதியில் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்றார். அங்கிருந்து கண்டன்விளைக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாலூர் அருகே தாளையங்கோட்டை பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த ...

Read More »
Larry-collapsed-and-fell-into-the-middle-of-the-tree-and

லாரி மோதி மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் காவல் கிணற்றில் இருந்து தார் ஜல்லிக்கலவையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலையில் ஆரல்வாய்மொழி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் நின்ற ஒரு ஆலமரத்தில் வேகமாக மோதியது. இதில் மரத்தின் ஒரு பகுதி முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்தது. டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த மரம் ரோட்டில் விழுந்தபோது வாகனங்கள் எதுவும் வராததால் ...

Read More »
Coalition-decision-on-election-day-Ponnathirakaran

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு: மு.க.ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

களியக்காவிளை, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்தது. அதனை சிலர் வேண்டும் என்று தடுத்து வருகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் 10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏழை மக்களுக்கு மிகவும் ...

Read More »
Resistance-to-link-the-Kumari-forest-to-the-Tiger-reserve

குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், குமரி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2006 வன உரிமைச்சட்டம் அமைக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் தனியார் காடுகளாக மாற்றப்பட்ட பட்டா விளை நிலங்களை நிபந்தனை இன்றி விடுவிப்பு செய்ய வேண்டும், கரடி, பன்றி, ...

Read More »
He-was-in-the-throes-of-the-Poike-dam

பொய்கை அணையில் விரிசல் தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்

ஆரல்வாய்மொழி, ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை உள்ளது. இந்த அணையில் தற்போது 28 அடி தண்ணீர் உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, அணையில் மறுகால் மதகின் அருகே சுவரில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று பொய்கை அணையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் விரிசல் ஏற்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், விரிசலை கண்டறிந்து அதை உடனே ...

Read More »
Passing-the-rope-and-leaving-the-leopard-in-the-rubber

கம்பிவேலியை கடந்து ரப்பர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை திரும்ப வர முடியாமல் தவிப்பு

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை அடுத்த ஓடம்தோட்டில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் இருந்து வந்தது. மேலும் விவசாய நிலங்களை வனவிலங்குகளும் சேதத்தை ஏற்படுத்தி வந்தன. இதனை தொடர்ந்து காட்டு பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை பிடிக்க கம்பி வேலியை அந்த பகுதியில் உள்ள சிலர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் காலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அங்கு வேலைக்கு சென்றனர். அப்போது ரப்பர் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று உலா ...

Read More »