Templates by BIGtheme NET
Home » குமரி செய்திகள் (page 2)

குமரி செய்திகள்

The-2nd-phase-of-the-survey-the-rare-species-of-birds-in

2–வது கட்டமாக கணக்கெடுப்பு: குமரி வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதே போல இந்த ஆண்டும் பறவைகள் கணக்கெடுப்பு பணி 3 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இந்த நிலையில் 2–வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது. அதாவது வனப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளை நேரில் சென்று பார்த்து கணக்கெடுத்தனர். இதற்காக மாவட்ட வன அதிகாரி ஆனந்த் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு குழுக்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி ...

Read More »
PM-candidate-DMK-The-duo-plays-the-role-of-gold

பிரதமர் வேட்பாளர்: தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி, சென்னையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் தேர்ந்து எடுக்கப்படுவார் என்பதை ஒப்புக்கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தி.மு.க. இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாகி இருக்கிறது. கொல்கத்தாவில் நடத்தியிருப்பது எதிர்கால கூட்டணிக்கான நிகழ்வாக பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் கூட்டணியாக தான் பார்க்க முடிகிறது. இந்த கூட்டணியில் 22 கட்சிகள் இணைந்திருப்பதாக கூறுகிறார்கள். 22 கட்சிகள் ...

Read More »
Fraud-is-a-source-of-financial-assistance-for-building-homes

ஒகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கி தருவதாக மோசடி; போலி போதகர் கைது

கொல்லங்கோடு, ஒகி புயலால் கடந்த 2017-ம் ஆண்டு குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, நீரோடி ஆகிய கிராமங்களில் போதகர் எனக்கூறிக்கொண்டு ஒருவர் வந்து, ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி, அதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு தொகையை ...

Read More »
Intercity-Express-canceled-between-Nellai-and-Trivandrum

ஆரல்வாய்மொழியில் புதிய பாலம் கட்டும் பணி நடப்பதால் நெல்லை- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து

நாகர்கோவில், திருச்சியில் இருந்து நெல்லை, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வருவது வழக்கம். இந்த ரெயில் நேற்று நெல்லை- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது. இதுபோல், நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக காலை 6 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ...

Read More »
Class-10-case-gang-raped-near-Kanyakumari

கன்னியாகுமரி அருகே 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி, சுசீந்திரம் கொத்தையடி தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 23). இவரும், கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தனர். நண்பர் குடும்பத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உள்ளார். அவரது தயார், சிறுமி சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதனால், சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வந்தார். நண்பர்கள் குடும்பம் என்பதால் சிவகுமார், சிறுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, சிறுமியுடன் நெருங்கி பழகினார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ...

Read More »
Pongal-vacation-ended-Nagercoil-bus-stand-to-reach-out-to

பொங்கல் விடுமுறை முடிந்தது: வெளியூர் செல்வதற்கு நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது

நாகர்கோவில், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12, 13-ந் தேதிகள் (சனி, ஞாயிறு) உள்பட 17-ந் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் வசிக்கும் குமரி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து இருந்தனர். பொங்கல் விடுமுறை முடிவடைந்து குமரி மாவட்ட மக்கள் ...

Read More »